தூங்கும் முன்பு இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க... என்னென்ன உணவுனு தெரிஞ்சிக்கோங்க
இரவில் தூங்கும் முன்பு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் நள்ளிரவில் சாப்பிடுவது, இரவு நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது இவற்றினால் சரியான தூக்கம் இல்லாமல் பலரும் கஷ்டப்படுகின்றனர்.
பலரது வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள் மாறியுள்ளது. இரவு வேலை என்பதால் பகலில் தூங்கிவிட்டு, நள்ளிரவில் செரிமானம் ஆகாத உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இரவு நேரத்தில் சில உணவுகளை தவிர்த்து சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் இரவில் சாப்பிடக்கூடாத உணவினை குறித்து தெரிந்து கொள்வோம்.

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்
இரவில் தூங்குவதற்கு முன்பு டார்க் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கவும். சாக்லேட்டில் காஃபின், சர்க்கரை அதிகமாக இருக்கும் என்பதால் இவை தூக்கத்தை கெடுக்கின்றது. உடல் எடை அதிகரிக்கவும், செரிமான பிரச்சனையும் ஏற்படுத்துகின்றது. தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு சாப்பிடலாம்.

இரவில் அதிக காரமான உணவினை சாப்பிடுவது கூடாது. இவையும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும். காரமான உணவில் கேப்சைசின் உடலில் சூட்டை அதிகரித்து, அசௌகரியத்தினை ஏற்படுத்துகின்றது.

இரவு நேரத்தில் சீஸ் கலந்த உணவான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் செரிமானத்தை பாதிப்பதுடன், அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கவும் செய்கின்றது.

இரவு தூங்குவதற்கு முன்பு டீ, காஃபி குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை தூக்கத்தை கெடுக்குமாம். ஆதலால் தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு குடித்துவிடவும். அவ்வாறு இல்லைனெில் தூக்கத்தை கெடுத்து மன உளைச்சல், சோர்வு ஏற்படும்.

சிட்ரஸ் பழங்களை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தூக்கத்தை கெடுப்பதுடன், இதிலுள்ள நீர்ச்சத்து அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் வழிவகுக்கின்றது. ஆதலால் பகல் நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது.
ஐஸ்கிரீம் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை உடல் எடையை அதிகரிப்பதுடன், செரிமான பிரச்சனையும் ஏற்படுத்தி தூக்கத்தை தொந்தரவு செய்யுமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |