தனியாக பயணித்த பென்குயின்! விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?
தனியாக பயணம் செய்து பென்குயின் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ஏன் இதனை நெட்டிசன்கள் பரபரப்பாகி வருகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பென்குயினின் பயணம்
கடந்த 2007ம் ஆண்டு வெர்னர் ஹெர்சாக் என்ற இயக்குனரால் எடுக்கப்பட்ட Encounters At The End Of The World என்ற ஆவணப்படம் தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இது பென்குயின்கள் குறித்த டாக்குமெண்டரி படமாகும். இதில் ஒரு காட்சிகள் பல ஆண்டுகளுக்கு பின்பு வைரலாகி வருகின்றது.
குறித்த படமானது உலகின் இறுதி என்று கூறப்படும் அண்டார்டிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பென்குயின் எப்பொழுதும் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றது. மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டமாக சேர்ந்தே பயணிக்கின்றது. இந்த படத்தில் ஒரே ஒரு பென்குயின் மட்டும் கூட்டத்திலிருந்து விலகி தனி வழியில் சென்றுள்ளது தான் தற்போது பேச்சுப்பொருளாக இருக்கின்றது.

அந்த பென்குயின் தனியாக தனக்கு எதிரே உள்ள மலையை நோக்கி செல்ல ஆரம்பத்த நேரத்தில், ஒருமுறை மட்டும் தனது கூட்டத்தை திரும்பி பார்த்துவிட்டு நடந்துள்ளது.
பென்குயினை தனது கூட்டத்தில் கொண்டுவந்து விட்டாலும், அது மீண்டும் அந்த மலைக்கே தனித்து சென்றுள்ளதாக இயக்குனர் கூறுகின்றார்.
அவ்வாறு மலையை நோக்கி சென்றால் மரணம் உறுதி என்று தெரிந்தும், பென்குயின் மலையை நோக்கி பயணித்தது ஏன் என்ற கேள்வி தான் அனைவருக்கும் எழுந்துள்ளது.
காரணம் என்ன?
பொதுவாக சமூக வலைத்தளங்களில் விலங்குகளின் காணொளிகள் எதுவும் வைரலாகினால், அதனை தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவது மனிதர்களின் இயல்பாக இருக்கின்றது.
அந்த வகையில் குறித்த பென் குயின் தனியாக சென்றதற்கு காரணமாக, கூட்டத்தில் இருந்து தனித்து வாழ விரும்பியே குறித்த பென்குயின் சுதந்திரத்தினை தேடி சென்றுள்ளது என்கின்றனர்.

ஒரு சிலர் அதற்கு வாழவே பிடிக்காமல் யோகிருக்கலாம் என்று கூறி வருகின்றனர். மற்றும் சிலர் வாழ்க்கையில் மரணமே ஏற்பட்டாலும், தான் போகும் வழியில் இருந்து பின்வாங்கக்கூடாது என்ற பாடத்தை உணர்வதாக கூறுகின்றனர்.

அறிவியல் காரணம் என்ன?
டேவிட் ஏன்லி என்ற ஆராய்ச்சியல் உடல் நலக்கோளாறு, சுற்றுச்சூழல் காரணங்களினால் குறித்த பென்குயின் தனித்து சென்றிருக்கும் என்று கூறுகின்றார்.
அனுபவம் இல்லாத மற்றும் இளம் பறவைகள் தங்களுக்கு பரிட்சயம் இல்லாத பாதையில் விலகிச் செல்லும் என்றும், அல்லது பென்குயின் நோயினால் பாதிக்கப்பட்டோ, காயம் காரணமாகவே திசை மாறி பயணத்தினை மேற்கொண்டிருக்கலாம்.
புதிய பாதையினை சோதனை செய்யும் நோக்கத்தில் கூட குறித்த பென்குயின் இவ்வாறு சென்றிருக்கலாம் என்று கூறுகின்றார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |