சுகர் நோயாளிகளும் விரும்பி விரும்பி சாப்பிடக் கூடிய ரவை பாயாசம்! 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
ரவையில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகளை செய்து ருசிக்கலாம்.
ரவையில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், புரதம் , நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ரவை மாவு நமது உணவில் ஆரோக்கியமான சமநிலையை வழங்குகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி சாப்பிடலாம். ரவை உப்புமா, ரவை தோசை, ரவை இட்லி என ஏராளமான உணவுகளை ருசித்திருப்போம்.
இன்று நாம் சுவையான ரவை பாயாசம் செய்து அசத்தலாம்.
ரவை பாயாசம் தயாரிப்பதற்கு மிக எளிதான உணவு.
இது மிகவும் சுவையானது என்பதால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சிற்றுண்டியாக உள்ளது.
ரவை பாயாசம் தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை - 1 கப்
- ஜவ்வரிசி - அரை கப்
- தண்ணீர் - 3 கப்
- வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்
- தேங்காய் பால் - 3 கப்
- ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
- முந்திரி - விருப்பத்திற்கேற்ப
- நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.