மணமணக்கும் வாசனையுடன் இரண்டே நிமிடத்தில் செய்யலாம் இன்ஸ்டன்ட் சட்னி பொடி!
பொதுவாக இரவு மற்றும் காலை வேளைகளில் மிக இலகுவாக செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
மேலும் இட்லி, தோசை, கஞ்சி, .இடியாப்பம் என அரிசிமாவினால் செய்யக்கூடிய உணவுகளை எடுத்து்க கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆனால் காலையில் தயாரிக்கும் போது சில வேளைகளில் தாமதமாகும் அப்போது சட்னி வைக்க நேரம் இருக்காது.
இதன்படி தோசை, இட்லி ஆகிய உணவுகளை சூப்பரான காமினேஷனாக இன்ஸ்டன்ட் சட்னி பொடியை வைத்து சாப்பிடலாம்.
அந்தவகையில் இன்ஸ்டன்ட் சட்னி பொடி எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1 கப்
உப்பு- தேவையானளவு
தயாரிப்புமுறை
முதலில் வெறும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, காய்ந்த மிளகாயை மிதமான வெப்பநிலையில் வறுக்கவும்.
இதன்பின்னர் இவையனைத்தும் பொன்னிறமாக மாறும். இதன்போது அதனை எடுத்து உப்பு சேர்த்து மிக்ஸில் போட்டு பவுடர் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சட்னி பொடி தயார்! இதில் காரத்திற்கு ஏற்பட்ட மிளகாய் பொடி அல்லது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டில் சட்னி இல்லாத போது இதனை பொட்டு தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிடலாம். புளிப்பு சுவையில் தேவைப்பட்டால் தயிர் அல்லது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த சட்னி பொடியை அரைத்து கண்ணாடி போத்தலில் போட்டு குளிர்சாதனப் பேட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பதப்படுத்தும் போது சுமார் ஒரு வாரத்திற்கு சாப்பிடலாம்.