சக்கரை வியாதியில் இருந்து இரத்த அழுத்தம் வரை பல நோய்களைக் கட்டுப்படுத்தும் குழம்பு!
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
இந்த சக்கரை வியாதியை மட்டுமல்ல இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க ஏற்ற உணவுதான் இந்த வெந்தயக் குழம்பு.
இப்போது இந்த வெந்தயக் குழம்பை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம் – 1,1/2 தேக்கரண்டி
- நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி
- கடுகு, உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- பூண்டு – 10 பற்கள்
- சிறிய தக்காளி – 1
- கறிவேப்பிலை – சிறிதளவு
- வத்தல் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லி தூள் – 1தேக்கரண்டி
- குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரகதூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புளி – 1 எலுமிச்சை அளவு
செய்முறை
பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.
பின்னர் பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.
அதனுடன் வத்தல், குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்,
15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது வெந்தயக் குழம்பு தயார்.