புத்தாண்டில் சுவையாள மிளகு வடை செய்து ருசியுங்கள்....30 நிமிடம் போதும்!
மிளகு வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
புத்தாண்டான இன்று இதனை செய்து ருசிக்கலாம்.
இனி சுவையான மொறு மொறு மிளகு வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உளுந்தம் பருப்பு – 200 கிராம்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி – சிறிதளவு
- நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
மிளகு வடை செய்முறை
உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து, தண்ணீர் முழுவதையும் ஒட்ட வடிகட்டவும்.
உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். அதாவது உளுந்தம் பருப்பினை 70 சதவீதம் அரைத்தால் போதுமானது.
மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல், கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.
1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.
உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து, உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வடையாக விரித்தது நடுவில் சிறுதுளையை இடவும். வடையாக விரித்த மாவினை காய்ந்த எண்ணெயில் போடவும்.பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் வடையை வெளியே எடுக்கவும்.
சுவையான மிளகுவடை தயார்.