சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவினை கட்டாயம் எடுத்துக்கோங்க
ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சிறுநீரகம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
காலிஃப்ளவர்
சிறுநீரகங்களுக்கு மிகவும் உகந்த உணவுகளில் காலிஃப்ளவர் முக்கியமானது. இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் சி, கே மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன.
மேலும், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலிஃப்ளவரைத் தவறாமல் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைக் குறைத்து நச்சுக்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
ப்ளூபெர்ரி
அளவில் சிறியதாக காணப்படும் ப்ளூபெர்ரி பழங்கள் சிறுநீரகத்தினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. இதில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உள்ளது.
இவை சிறுநீரகங்களைப் பாதுகாக்க மிகவும் ஏற்றதாகவும், இதய நோய், நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றது.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு நிற குடைமிளகாயில் வைட்டமின் ஏ, சி, பி6, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றது.
இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
பூண்டு
உணவுக்கு சுவையை அதிகரிக்கும் பூண்டு சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இதில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளது.
ஆகவே, சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது சிறுநீரகங்களுக்குப் பாதுகாப்பானது.
முட்டையின் வெள்ளைக் கரு
உடலுக்கு புரதம் மற்றும் பாஸ்பரஸ் அத்தியாவசியம் என்றாலும், அதிகப்படியான பாஸ்பரஸ் சிறுநீரகத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
முட்டையின் வெள்ளைக் கருவில் பாஸ்பரஸ் குறைவாகவும், புரதம் போதுமான அளவிலும் உள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவைத் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரகங்களுக்கு அதிக சுமை கொடுக்காமல், அவை சீராகச் செயல்பட வழிவகை செய்யும்.
முட்டை சாப்பிட விருப்பமில்லை என்றால், பாலாடைக்கட்டி (Cottage Cheese) அல்லது டோபு (Tofu) வடிவில் புரதத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |