விமானத்தின் கழிவறையை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
பொது இடங்களில், பயணத்தின் போது கழிவறையை பயன்படுத்துவது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும், கிருமிகள் நம்மை தாக்க அதுவே காரணமாக அமையக்கூடும்.
இந்த பதிவில் விமான பயணத்தின் போது எப்போது கழிவறையை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
விமானத்தின் ஏறுவதற்கு முன்பாக விமான நிலையங்களில் உள்ள கழிவறையை பயன்படுத்துவதே சிறந்தது.
இதேபோன்று விமானத்தில் உணவு வழங்கப்படுவதற்கு முன்பாக கழிவறையை பயன்படுத்தலாம்.
விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை சிலருக்கு பிரச்சனையை உண்டுபண்ணலாம் என்பதால் கழிவறையை பயன்படுத்துவதை சங்கடமாக உணரலாம்.
விமானம் தரையிறங்கப்போகிறது என்ற அறிவிப்புக்கு முன்னதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விமானத்தில் உள்ள பயணிகள் தூங்கும் நேரங்களில் கழிவறையை பயன்படுத்தலாம்.
எப்போது பயன்படுத்தக்கூடாது?
விமான புறப்படும் முன், தரையிரங்கும் முன் கழிவறையை பயன்படுத்துவது மிக மோசமானதாகும்.
ஏனெனில் புறப்படும் போதும், தரையிரங்கும் போது சிறிய அதிர்வு இருக்கும், இது கழிவறையை பயன்படுத்துவதற்கு சாதகமானதாக இருக்காது.
மேலும் விமானத்தில் உள்ள கழிவறையை முழுமையாக சுத்தம் செய்யப்படுமா? என்பதும் கேள்விக்குறிதான்.
உங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.