சக்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிட்டாலாமா? மீறி சாப்பிட்டால் ஆபத்து வருமா?
சக்கரை நோயாளிகளுக்கு என்று நிறைய உணவுக்கட்டுப்பாடுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.
அந்தவகையில் சக்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்த்தே ஆக வேண்டும் என்ற பெரிய கட்டுப்பாடு இருக்கின்றது.
இந்த சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்கும்.
மேலும், தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.
இப்படி பல நன்மைகளை கொண்டிருக்கும் தர்பூசணியானது சக்கரை நோயாளிகளுக்கு ஏற்றதா என்று பலருக்கு பல கேள்விகள் இருக்கும். தர்பூசணியில் அதிகம் சக்கரை இருந்தாலும் சக்கரை நோயாளிகளுக்கு மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தர்பூசணி இனிப்பாக இருப்பதால் உங்களை இனிப்பு உணவுகளை சாப்பிட தூண்டாது.
சக்கரை வியாதியுள்ளவர்கள் தர்பூசணி பழத்தை பழமாக மாத்திரம் தான் சாப்பிட வேண்டும் ஜுஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மேலும், ர்க்கரை நோயாளிகள் எப்பொழுதுமே மிதமான அளவில் மட்டுமே தர்பூசணிப் பழங்களை சாப்பிட வேண்டும்.