சக்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா? அவ்வாறு சாப்பிட்டால் எத்தனை சாப்பிடலாம்!
பொதுவாகவே சக்கரை நோயாளிகள் சில இனிப்பு உணவுகள் சாப்பிடக்கூடாது என்பார்கள். அப்படியானவர்கள் பேரீச்சம் பழம் மட்டும் சாப்பிடலாமா என்றக் கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்துக்கொண்டுதான் இருக்கும்.
சக்கரை நோயாளிகளுக்கு என்று நிறைய உணவுக்கட்டுப்பாடுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில் சக்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்த்தே ஆக வேண்டும் என்ற பெரிய கட்டுப்பாடு இருக்கின்றது.
சக்கரை நோயாளிகளுக்கு
அவ்வாறு இவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா என்றுக் கேட்டால் அது அவர்களின் நோயின் அளவைப் பொருத்துதான் சாப்பிடவேண்டும் என்பார்கள்.
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகளவில் உள்ளது. மேலும், அதிகமான கலோரிகளைக் கொண்டது. இது மற்ற உலர் பழங்களை ஒப்பிடும்போது பேரிச்சம் பழத்தில் அதிக கலோரிகள் உள்ளது.
எனவே ஒரே நேரத்தில் பல பேரிச்சை பழம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் நான்கு அல்லது ஐந்து பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும்.
சக்கரை நோய் உள்ளவர்கள் அதிக இனிப்பு சுவையுள்ள உணவுகள், அதிகக் கலோரி உணவுகள் சாப்பிடுவதால்உடலில் உள்ள இன்சுலின் அளவு பாதிக்கப்படும் இதனால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
அந்தவகையில் பேரிச்சை பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. தினமும் இரண்டு முதல் மூன்று பழங்கள் வரை சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மையை விளைவிக்கும்