தினமும் உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்தால் என்னனென்ன விளைவுகள் தெரியுமா?
தினமும் நாம் உண்ணும் உணவில் சுவைக்காகவும் மருத்துவத்திற்காகவும் சில மசாலா பொருட்கள் சேர்ப்பதுண்டு.
அந்த மசாலாப் பொருட்களில் மிளகுவும் ஒன்று அந்த மிளகை உங்கள் உடலுக்கு அளவுக்கு அதிகமாக சேர்த்தால் என்ன ஆகும் தெரியுமா?
மிளகில் அதிகளவு மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் குறைந்த கலோரிகள், தாதுக்கள், விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன.
இருந்தாலும் இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு பல ஆரேக்கிய குறைப்பாடுகளை வழங்குகின்றது.
மிளகின் தீமைகள்
மிளகு அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும் போது அது இரைப்பையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதனால் வயிற்றில் புண், வயிற்று போக்கு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கருப்பு மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும். இது குழந்தைகளை மிகவும் பாதிக்கும்.
மிளகை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, சுவாச மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. மிளகுகள் மூச்சு விடுதல் பிரச்சினைகளும் தொண்டையில் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் பிற வகை சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
மிளகை கர்பகாலத்தில் குறைவான அளவில் எடுத்துக் கொள்ளும் போது கர்ப்பத்திற்கு எந்த தீங்கு இல்லை. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது கருப்பு மிளகு கருச்சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
அதுபோல பால்கொடுக்கும் தாய்மார்கள் மிளகை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்துக் கொள்வது.