சக்கரை நோயாளிகளுக்கு பரம எதிரியான மைதா மா: கொஞ்சம் சேர்த்தாலும் உயிருக்கு ஆபத்து!
சக்கரை நோயாளிகளுக்கு இனிப்பே பெரும் எதிரி என்றாலும் மைதா மாவும் எதிரிதான். சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மைதா எடுத்துக் கொண்டால் என்னவாகும் தெரியுமா?
சக்கரை நோய்
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
சக்கரை நோயாளிக்கு ஆபத்து
சக்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை கொடுக்கக்கூடியதில் ஒன்று இந்த மைதா மா.
இந்த மைதாவை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்று கூறப்படுகிறது. இதில் கோதுமை மாவில் இருக்கும் நார்ச்சத்து அளவில் கூட மைதா மாவில் எந்தவொரு சத்துக்களும் இல்லை.
மேலும், இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பில் சக்கரை அளவு அதிகரிக்கும் அது மட்டுமல்லாமல் கொழுப்பு அதிகரித்து இதய கோளறுகள் ஏற்படும்.
இதில் ரசாயன பொருள்களை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதால் இது உடல் நலத்திற்கு இன்னும் தீங்கானது.