சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா?
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது.
அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
ஆனால் சக்கரை நோய் இருப்பவர்கள் பாதாமை இப்படி சாப்பிட்டால் நோய் பற்றி கவலை இல்லை என ஆய்வில் வெளியாகியுள்ளது.
சக்கரை நோய்க்கு பாதாம்
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பாதாம் பருப்பை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இரத்ததில் உள்ள குளுகோஸ் அளவு குறைந்து விடும்.
பாதாமில் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFAs), நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை இருப்பதால் உணவுக்கு முன் இதை சாப்பிடுவது உடலுக்கு நன்மையைக் கொடுக்கும்.
பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு தான் சர்க்கரை அளவு அதிகமாகிறது. சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு அதிகரிப்பது ஆரம்பத்திலேயே டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கிறது.
அதனால் உணவுக்கு முன் பாதாமை சாப்பிடுவதால் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இல்லாலும் போகலாம்.