சக்கரை நோயாளிகள் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சாக்லேட்: எதற்கு தெரியுமா?
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில், சக்கரைக் நோயாளிகளுக்கு எதிரியே இந்த இந்த இனிப்பு வகைகள் தான். அவ்வாறு பார்க்கையில் சக்கரை நோயாளிகள் சாக்லேட் சாப்பிட வேண்டும் எதற்காகத் தெரியுமா?
சக்கரை நோயாளிகளுக்கு சாக்லேட்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பைத் தூண்டும். உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உணவு உண்ணும் போது சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது, கடினமான வேலைகளை செய்தல் போன்றவை லோ சுகர் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்களை கையில் வைத்திருப்பது நல்லது. திடீரென சக்கரை அளவு குறைந்தால் சாக்லேட்களை உண்பது, ஜூஸ் அருந்துவது, சர்க்கரை கலந்துள்ள பொருட்களை உண்பது நல்லது.