சுகர் பேஷண்ட்ஸ் மாம்பழம் சாப்பிட்டாலாமா? ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்!
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது.
அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில், சக்கரைக் நோயாளிகளுக்கு எதிரியே இந்த இந்த இனிப்பு வகைகள் தான். அதேபோல இனிப்பு, புளிப்பு என கலந்து இருக்கும் மாம்பழத்தை சாப்பிட்டால் என்னனென்ன நன்மைகள் என்பதைப் பார்க்கலாம்.
சக்கரை நோயாளிகளுக்கு மாம்பழம்
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் முதல் 200 கிராம் வரை கார்போஹைட்ரேட் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 30 கிராம் கார்போஹைட்ரேட் பழங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
100 கிராம் மாம்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் இதில் ஒரு சிறிய மாம்பழத்தை மாத்திரம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், மாம்பழங்கள் சாப்பிட்டால், நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் ஒரு மாம்பழத்தை எடுத்து அதில் பாதி அளவை சாப்பிட்டால் நல்லது.
அதிலும் மாம்பழங்களை நன்றாக சாப்பிட்ட பின் சாப்பிடக் கூடாது, காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் தான் இந்த மாம்பழங்களை சாப்பிட வேண்டும்.