சர்க்கரை நோயை கவனிக்காமல் விடாதீங்க! ஆபத்து பயங்கரமா இருக்குமாம்
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும்.
கட்டுப்பாடில்லாத சர்க்கரை, ரத்தத்தில் கலந்தே இருக்கும் என்பதால் ரத்தம் போகும் உறுப்புகள் அனைத்துமே சேதப்படலாம். அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டால் உண்டாகும் ஆபத்துகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்
ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது, நல்ல கொழுப்பான HDL குறைந்துவிடும். இதனால் LDL அதிகரித்து, கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து விடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம் உயரும். இஅதனால் அதிக ரத்த அழுத்தம் உண்டாகி பக்க வாதம் வர வாய்ப்புகள் உண்டாகும்.
அதிகரிக்கும் குளுகோஸ் அளவால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு அங்கே சிதைவை உண்டாக்கின்றன. அந்த பாதிப்பை சரிப்படுத்தும் விதமாக அங்கு புரோட்டின் ஒன்று சதைப் போல் உருவாகிறது. இதுவே கண் பார்வைத் திறன் குறைய காரணம்.
சிறுநீரகத்தில் பிரச்சினை
ரத்தத்தில் அதிகரிக்கும் குளுகோஸால் ரத்தம் அடர்த்தியாகும். இதனால் சிறு நீரகத்திலுள்ள நெஃப்ரானால் ரத்தத்தை வடிகட்ட முடியாமல் திணறும். அதோடு சிறு நீரகத்தில் அதிக அளவு புரோட்டின் வெளியேறிவிடும். இதனை கவனிக்காமல் அப்படியே விட்டால் 10 வருடங்களில் சிறு நீரகம் பாதித்து, இறுதியில் சிறு நீரகம் பழுதடையும் அபாயம் ஏற்படும்.
கை கால்களில் நடுக்கம் உண்டாகும். எல்லா இணைப்புகளில் வீக்கம், வலி உண்டாகும். நரம்புகளில் தேக்கம் உண்டாகி ரத்த ஓட்டம் பாதிக்கும். வலைப் பின்னல் போல் ஆங்காகே உருவாகிவிடும்.
இதய நோய் பிரச்சினை
தலையிலிருந்து பாதம் செல்லும் நரம்பு பாதிக்கப்படும்போது, பாதங்களுக்கு சரியாக ஊட்டம் மற்றும் ரத்தம் போகாததால் மரத்து போய், பாதங்களின் வடிவம் மாறும்.
ஷூ, அல்லது பாதத்தை மூடும் வகையில் போடும் செருப்புகளால் சிறிய காயம் அல்லது கொப்புளம் போல் உருவாகி, குணப்படுத்த முடியாத நிலையில் இறுதியில் பாதம் ஏன் கால்களைக் கூட இழக்க நேரிடும்.
அதிக குளுகோஸ், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை இதயத்தில் ரத்த ஓட்டத்தை குறைக்கச் செய்யும். இதனால் பக்க வாதம், ஹார்ட் அட்டாக், மற்றும் இதர இதய நோய்களை உண்டாக்கும்.
சாதரணமாக சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் வாழும் வாழ் நாளைவிட 13 வருடங்கள் குறைவாகவே சர்க்கரை நோயாளிகளால் வாழ முடியும்.