காலை எழுந்தவுடன் நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடலாமா?
பாதாம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருந்தாலும் பலரும் நீரில் ஊறவைத்து தான் சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். பாதாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
மேலும், இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனஅழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
ஆய்வுகளின் படி மக்கள் அதிக அளவு வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். பாதாம் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இப்படி ஆரோக்கிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்? பாதாம் பருப்பை ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.
எந்த நேரம் சாப்பிடலாம்? பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது.