100 ரூபா கூட இல்லாம... வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைகளை பகிர்ந்த அனிதா சம்பத்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான அனிதா சம்பத் தன் வாழ்க்கையில் சந்தித்த வேதனையை பேட்டியொன்றில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
அனிதா சம்பத்
செய்திவாசிப்பாளராக மக்களுக்கு பரிட்சயமானவர் தான் அனிதா சம்பத். சில படங்களிலும் சில கேரெக்டர்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவ்வப்போது சின்னத்திரையில் சில சீரியல்களிலும் தலைக்காட்டி வருகிறார்.
அண்மையில் கூட புதிதாக வீடு கட்டியிருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த அனிதா சம்பத் தனது ஆரம்பக் கால வேதனைகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, ஆரம்பக்காலத்தில் தான் அதிக கஷ்டப்பட்டதாகவும், பல விடயங்களுக்கு அதிகம் போராடியதாகவும் இவை எல்லாவற்றையும் தாண்டி தான் வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அனிதாவின் மறுப்பக்கம்
அனிதா செய்தி வாசிப்பாளராக வேலை செய்துக் கொண்டிருந்த நேரத்தில் பஸ்க்கு கூட காசு இல்லாமல் பல நேரம் நான் தவித்திருப்பதாகவும், திடீர் செலவு என்று ஏதாவது வந்துவிட்டால் கூட ஒரு 100 ரூபாய் கையில் இல்லாமல் தவித்திருக்கிறாராம்.
அப்போது கூட இருப்பவர்களிடம் பணத்துக்காக கெஞ்சி கேட்டும் யாரும் கண்டுக்கொள்ளாலாமல் அவமானப்படுத்தி விட்டார்களாம்.
என்னதான் ரிவியில் வேலை செய்தாலும் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினை யாருக்கும் தெரியாது.
பார்ப்பவர்கள் எல்லாம் சிரித்த முகத்துடன் இருப்பதால் கவலை இல்லாதவள் என்று கடந்து விடுவார்கள் எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து உங்களுக்கு நீங்களே நம்பிக்கை ஊட்டிக் கொள்ளுங்கள் என ஊக்கமளிக்கும் வகையில் தெரிவித்திருக்கிறார்.