ஆங்கில செய்தி வாசிப்பாளராக மாறிய ராதிகா! மிரண்டு போன ரசிகர்கள்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான ரேஷ்மா "கலக்க போவது யாரு champions" ஷோவில் ஆங்கில செய்தி போல் பேசிக் காட்டிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் நாயகியாக கலக்கும் ரேஷ்மா
தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ரேஷ்மா இரண்டாம் கதாநாயகியாக வந்து, பாக்கியலட்சுமி சீரியலின் வில்லியாக கலக்கி வருகிறார்.
இவரின் நடிப்பிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே செல்கிறார்கள். மேலும் இவரின் காந்த பார்வையும் வில்லத்தனமான நடிப்பும் பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பியை கூட்டிக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேஷ்மா வெள்ளத்திரையிலும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தே இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆங்கில செய்தி வாசிப்பாளராக மாறிய நிஷா
மேலும் ரேஷ்மா தற்போது ,“கலக்க போவது யாரு” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் இவர் ஆங்கிலத்தில் கலக்க போவது யாரு champions என்ற நிகழ்ச்சியை ஒரு செய்தியாக தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனை பார்த்த சிறப்பு விருந்தினர் உட்பட பார்வையாளர்களும் மெய்சிலிர்த்து போயுள்ளார்கள். இவருக்குள் இந்த திறமை இருப்பது இந்த ஷோவின் தான் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ ராதிகாவிற்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா? என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.