சிரித்த முகத்துடன் க்யூட்டாக வந்த நயன்…புதுமண தம்பதிகள் எங்கு தங்கியிருக்கின்றார்கள் தெரியுமா?
கேரளாவுக்கு சென்றுள்ள புதுமண தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிராண்டாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து, கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து, ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நேற்று புதுமணத் தம்பதிகள் நயன்தாராவின் பெற்றோரை சந்திக்க கொச்சிக்கு சென்றனர.
கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் இவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
அந்த புகைப்படத்தில், நயன்தாரா ஆரஞ்சு நிற உடையிலும், விக்னேஷ் Bal Main T shirt அணிந்து இருந்தார். மேலும், கேரளாவுக்கு வந்த இந்த ஜோடிக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிராண்டாகி உள்ளது.