விக்ரமனை சீண்டிய அனிதா சம்பத்: அனிதாவிற்கு கொடுத்த பதிலடியால் விக்ரமனை பாராட்டிய மக்கள்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப்பெற்ற விக்ரமனை கேள்விகளால் வாயடைக்கப்பார்த்த பிக்பாஸ் அனிதா சம்பத்திற்கு பதில்களால் விளாசியிருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இறுதியாக 21 போட்டியாளர்களில் இருந்து அசீம், விக்ரமன், ஷவின் ஆகியோர் பைனல் வரை சென்றார்கள். டைட்டில் வின்னராக விக்ரமன் தான் வெல்வாரென அதிகம் எதிர்ப்பாக்கப்பட்டது ஆனால் இறுதியில் அசீம் டைட்டிலை வென்றார், இரண்டாம் இடத்தை விக்ரமனும், மூன்றாம் இடத்தை ஷிவின் பெற்றிருந்தார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு அனைவரும் வெளியில் தற்போது வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மக்களும் அவர்களின் ஆதரவையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.
அனிதா - விக்ரமன்
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த போது விக்ரமனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு உங்களை ஏன் பெண் ரசிகர்கள் விக்கு என்று அழைக்கின்றனர் “இது என்ன மாமா குட்டி போன்றதா என்று அனிதா சம்பத் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த விக்ரமன் “விக்கு என்று அதற்கு வீட்டில் உள்ள ராம் தான் பெயர் வைத்தார். பின்னர் அனைவரும் அப்படியே கூப்பிட தொடங்கினர்.
பின்னர் நீங்கள் வெற்றியடையாத காரணத்தினால் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் எந்த அளவிற்கு பேசியிருந்தீர்கள் என்பது தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது என்று கூறினார் அனிதா சம்பத்.
இதனையடுத்து பெண்கள் பற்றி பேசிய போது பொதுவாக கோபம் என்பது எல்லோருக்கும் சமமானது. ஆனால் அதனை ஒரு பெண் செய்யும் போது “ஒருவேளை கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தால் “இதையெல்லாம் யார் கல்யாணம் பண்ணுவார்கள் என்று கூறுவார்கள், அதே கல்யாணம் ஆனா பெண்ணாக இருந்தால் இந்த பொண்ணு கூட எப்படி கணவன் வாழ்வான் என்று கேட்பார்கள்.
இதை நானே என் வாழ்வில் அனுபவித்திருக்கிறேன் என்று கூற அதற்கு விக்ரமன் அளித்த பதில் அங்கிருந்தவர்களை பாராட்டும் அளவிற்கு வந்தது.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கூட ஜி.பி.முத்து ஒரு இடத்தில் கூறியிருக்கிறார்.
பெண்ணாக இருந்து கொண்டு பாத்திரம் கழுவ தெரியாத என்று. அதற்கு நான் கழுவ இருந்தால் இதை செய்யவேண்டுமா? என கேட்டேன்.
இப்படி பேசுபவர்கள் அதிகமாக இறுகின்றனர் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி யாராவது பேசினால் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கிடையாது என கூறினார். இதற்கு அங்குள்ள மக்கள் ஆராவாரம் செய்து விக்ரமனை பாராட்டினர்.