வீட்டிற்கு சேவலை பலி கொடுக்க நினைத்த நபர்! இறுதியில் தனது உயிரைக் கொடுத்த சோகம்: நடந்தது என்ன?
புது விட்டிற்கு சேவலை பலி கொடுக்க சென்ற கொத்தனார் இறுதியில் தனது உயிரைவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
புது விட்டில் நடந்த சடங்கு
பொதுவாக புதிதாக வீடு கட்டினால் அங்கு துஷ்ட சக்தியை எதுவும் இருந்தால் அதனை விரட்டுவதற்கு, கோழியை அறுத்து ரத்த பலி கொடுப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் பொழிச்சலூரைச் சேர்ந்த லோகேஷ்(48) என்பவர் சொந்தமாக மூன்று மாடி வீடு ஒன்றினை கட்டி வந்துள்ளார். இந்த கட்டிடத்தில் மேஸ்திரி மற்றும் கொத்தனராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றிய நிலையில், வீட்டின் கட்டிட பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இதில் லிப்ட் போட வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தினை தயார் செய்து காலியாக வைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீட்டின் புதுமணை புகுவிழாவினை வீட்டின் உரிமையாளர் ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது மேஸ்திரியாக இருந்த ராஜேந்திரனே பூசாரியாக நின்று பூஜைகளை செய்துள்ளார். அனைத்து சடங்கையும் முடித்துவிட்டு இறுதியாக சேவலை ரத்த பலி கொடுப்பதற்கு 3வது மாடிக்கு சென்றுள்ளார்.
கீழே விழுந்து உயிரிழந்த சோகம்
அப்பொழுது லிப்ட் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளார். அவரது கையில் இருந்த சேவல் எந்தவொரு சேதமும் இல்லாமல் எஸ்கேப் ஆகியுள்ளது.
கீழே விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். உரிமையாளரின் புதுவீட்டுக்கு பூஜை செய்ய சென்ற மேஸ்திரி இவ்வாறு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேஸ்திரியின் மற்ற விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.