தலைமுடியை பளபளபாக்கும் வாழைப்பழம்: வாரத்திற்கு இருமுறை பயன்படுத்திப் பாருங்கள்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
தலைமுடிக்கு வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
இந்த வாழைப்பழத்தைக் கொண்டு நீங்கள் பளபளப்பான முடியைப் பெறலாம்.
1 வாழைப்பழம், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் தலைமுடியில் சமமாக தடவி 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
இதை பதினைந்து நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் உங்கள் தலைமுடி ஊக்கமாகவும் வறண்ட கூந்தல் போய் ஈரப்பதனமான கூந்தலைப் பெறலாம்.