அரச குடும்ப வாரிசு.. ஆர்த்திக்கு மறுமணமா? அம்மாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
“இருள் சூழ்ந்திருக்கும்போது, ஒரு கை நீள்கிறது,. அதை இறுகப்பற்றிக் கொள்" என ஆர்த்தியின் அம்மா போட்ட பதிவு மறுமணம் பற்றியது தான் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ரவிமோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் சமீபக்காலமாக ரவிமோகன் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடவில்லை.
இதற்கிடையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரவிமோகன் பல அடிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் 10,14 வயதில் இருக்கிறார்கள்.
விவாகரத்து
இப்படியொரு சமயத்தில் ரவிமோகன் மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்டார். விவாகரத்துக்கு ஆர்த்தியின் அடக்குமுறையை தான் காரணம் என்றும் அவர் பல தடவைகள் சுட்டிகாட்டியிருந்தார்.
அப்போது ஆர்த்தியும் அவர் பக்கம் இருக்கும் நியாயங்களை அறிக்கை மூலம் பகிர்ந்திருந்தார். இப்படி மாறி மாறி அறிக்கை வெளியாகிய போது. கெனிஷா என்ற பெண்ணுடன் ரவிமோகனுக்கு பழக்கம் இருப்பதாக தகவல் வெளியாகியது.
இது குறித்து ரவிமோகன் பேசுகையில், “ அவரிடம் தான் சிகிச்சை எடுக்கிறேன். அவருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை..” என்று பேசினார்.
கெனிஷாவுடனான உறவு
இருப்பினும் விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் பிரபலம் ஒருவரின் திருமணத்திற்கு கெனிஷா- ரவிமோகன் இருவரும் ஜோடியாக வந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் உட்பட ஆர்த்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆர்த்தி அறிக்கையொன்றை பகிர்ந்தார். அதில், “ மகன்களுக்காகவே பொறுமையாக இருக்கிறேன். என்னுடைய மகன்களின் வாழ்க்கை இதிலுள்ளது. அப்பா என்பது உறவல்ல அதிலுள்ள கடமைகளும் நிறைய உள்ளது...” என குறிப்பிட்டிருந்தார்.
ஆர்த்திக்கு மறுமணமா?
இந்த நிலையில், ஆர்த்தி தாயார் ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார், அதில், “உண்மை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம், எப்போதுமே உண்மையே வெல்லும்.. கடவுள் கருணை நிறைந்தவர். நமக்கு கடவுள் உதவி புரிவார்.. கடவுளின் வழிகளை ஒருபோதும் சந்தேகிக்காதே.. அது மிக சிறந்தது. இருள் சூழ்ந்திருக்கும்போது, ஒரு கை நீள்கிறது,. அதை இறுகப்பற்றிக் கொள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ஆர்த்தியின் மறுமணம் குறித்து பேசுகிறாரா?” என குழம்பி போயுள்ளனர். தொடர்ந்து ரவிமோகன்- ஆர்த்தி பற்றி வதந்திகளை விமர்சகர்கள் பரப்பி வருகிறார்கள். இதில் எது உண்மை? என்பதனை ஆர்த்தி தான் கூற வேண்டும்.
அரச குடும்ப வாரிசு
ஆர்த்தியின் அப்பா விஜயகுமாரின் அம்மா பெயர் கல்பனா. இவர் தமிழகத்தின் ஆளுநராக இருந்த மைசூர் மகாராஜாவான ஜே.எஸ்.சாம்ராஜ் உடையார் என்பவரின் மனைவி.
இவருடைய பங்களா தான் கடற்கரை பங்களா. சென்னையில் தங்க வேண்டியிருந்தால், மைசூர் மகாராஜா இந்த கெஸ்ட் அவுஸ் பங்களாவில் தான் தங்குவாராம்.
இந்த மைசூர் மகாராஜாவின் சென்னை மனைவியாக இருந்தவர் தான் கல்பனா. எனவே ஆர்த்தியின் அப்பா ஒரு அரச குடும்பத்தவர். ஆர்த்தி குடும்பத்தினர் நாம் எதிர்பார்த்த அளவு வசதியானவர்களாக தான் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |