ஈஸ்வரியை தலைமுழுகிய மாமனார்.. குணசேகரனுக்கு ஆப்பு வைத்த கடைசி வாய்ப்பு- நடந்தது என்ன?
குணசேகரன் நாடகம் தெரியாமல் ஈஸ்வரியின் தந்தை, ஈஸ்வரியை தலைமுழுகி விட்டதாக மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. ஆதிரை திருமணம் விடயத்தில் கலாட்டா செய்த ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் மணி விழாவுக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் கிளம்பாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.
பாதியில் நின்ற மணி விழா
இது ஒரு புறம் இருக்கையில், மணி விழாவில் ஜனனியுடன் கீழே வந்த ஈஸ்வரி மாலையை போட்டுக் கொண்டு குணசேகரன் பக்கத்தில் அமராமல் அப்படியே நிற்கிறார். அவருடைய பிள்ளைகள் மற்றும் அப்பா என வீட்டிலுள்ளவர்கள் கெஞ்சியும் அவர் குணசேகரன் பக்கத்தில் நிற்பதற்கு தயாராக இல்லை.
இதனால் கடுப்பான குணசேகரன் போட்டியிருந்த மாலையை கழட்டி வீசி விட்டு, வெளியில் சென்று அழுதுக் கொண்டிருக்கிறார். “இனியும் இன்னொரு அவமானம் எனக்கு வேண்டாம்..” எனக் கூறி அழுகிறார். தன்னுடைய அண்ணன் அழுவதை கண்ட கதிர், ஞானம் இருவரும் அழுகிறார்கள்.
அதன் பின்னர் நந்தினி ஐசுவை அமர வைத்து விழா நடத்துகிறார். அப்போது உள்ளே வந்த கதிர், ஞானம் இருவரும் அந்த நிகழ்வை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். நந்தினி தைரியமாக கதிரிடம் எதிர்த்து பேசுகிறார்.
விசாரணைக்கு வரும் வழக்கு
மணிவிழா நடக்காத காரணத்தினால் குணசேகரன் ஏற்கனவே போடப்பட்ட வழக்கில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என திட்டம் போட்டு முதலில் ஈஸ்வரியின் தந்தையை தன்வழிக்கு கொண்டு வந்துள்ளார். அவர், அதனை புரிந்து கொள்ளாமல், “ஈஸ்வரியை தலைமுழுகி விட்டேன். இனி அவள் என்னுடைய மகள் அல்ல..” என அழுதப்படி மன்னிப்பு கேட்கிறார்.
இதற்கு அடுத்தப்படியாக அடுத்த வரும் வழக்கு விசாரணையில் ரேனுகா மற்றும் நந்தினி இருவரும் நீதிமன்றத்திற்கு வராமல் விட்டால் வழக்கு தங்களுக்கு சாதகமாக மாறும் என வக்கில் கூறுகிறார். இதனால் புது பிளான் போட வீட்டிலுள்ளவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த ஈஸ்வரி இதற்கெல்லாம் என்ன பதிலடிக் கொடுக்கப்போகிறார் என்பதையும் தடைகளை தாண்டி நீதிமன்றத்திற்கு ரேணுகா, நந்தினி இருவரும் எப்படி வருவார்கள் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |