ஆர்த்தியை மீண்டும் கடுப்பேற்றிய ரவி மோகன்! கெனிஷா வெளியிட்ட வைரல் பதிவு
நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் ஒரு செயலை செய்துள்ளார்.
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அண்மையில் விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகன் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக கூறிவந்த நிலையில், ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில் தன் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறிய அவர், ஓராண்டாக தன் மகன்களுக்காக அமைதி காத்து வந்ததாக கூறினார். மேலும் ரவி மோகன் புது உறவை பற்றி விமர்சித்த ஆர்த்தி, தான் ஓராண்டாக சந்தித்து வந்த வலியையும், வேதனையும் விவரித்து இருந்தார்.
மீண்டும் பதிலடி
தன்னை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மனைவி ஆர்த்திக்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் விதமாக ரவி மோகன் மற்றொரு காரியத்தை செய்துள்ளார்.
அதன்படி, ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற போது மீண்டும் இதில் கலந்து கொள்ள கெனிஷாவுடன் வந்துள்ளார்.
இது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக மாறியுள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கெனிஷாவின் பதிவு
இந்த நிகழ்வு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி கெனிஷா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
'ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
