உங்கள் தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருக்கிறதா? வெறும் எலுமிச்சை சாறு மட்டுமே போதும்!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
தீர்வு
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும்.
பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற வைத்து விட்டு வழக்கம் போல நாம் உபயோகிக்கக் கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முட்டை மற்றும் எலுமிச்சை பாலில் உள்ள வைட்டமின் மற்றும் இயற்கை அழகு தரக்கூடிய சத்துக்கள் இணைந்து மயிர்கால்களை வலுவாக்குவதுடன் தலைமுடி சிக்கு இல்லாமலும் முடி உதிர்வதையும் தடுத்து பாதுகாக்கும்.