இளம் வயதில் முடி உதிர்வு பிரச்சினையா? உங்களுக்கான நிரந்தர தீர்வு இதோ: வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!
பொதுவாகவே வெங்காயம் சமையல் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் கூந்தல் அழகையும் பேண உதவும். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த வெங்காயமானது உங்கள் உடல் வெப்பத்தை தணித்து உஷ்ணத்தை சமப்படுத்துகிறது. மேலும், நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
பல நன்மைகளைக் கொண்ட இந்த வெங்காயம் கூந்தலுக்கு அதிகம் உதவுகிறது. எவ்வாறு பயன்படுகிறது, எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலம்.
கூந்தலுக்கு வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கும் சில குறிப்பிடத்தக்க தாது பொருட்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிய பங்காக இருக்கிறது.
அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கந்தகம் முக்கியமான ஊட்டச்சத்து இது வெங்காயத்தில் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டி, முடி இழப்பை தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்கிறது.
மேலும் வெங்காயம் முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.
வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவி வந்தால் பொடுகு, பேன், ஈறு ஆகியவற்றை நீக்கி, அழுக்குப் படியாமல் காப்பாற்றும்.
வெங்காய சாறை தலையில் தடவி 20நிமிடம் ஊறவைத்து தலைக்கு குளித்தால் உங்கள் உடலுக்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கவல்லது.
வெங்காயத்தில் ஆக்சிஜனேற்ற நிறைந்துள்ளதால் இளம் நரையை போக்கவும் உதவுகிறது.