பாம்பு தோலை உரிக்கும் போது பார்த்தால் கொத்துமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பூமியில் வாழும் மிகவும் வினோதமான உயிரினங்களில் ஒன்று தான் பாம்புகள்.
பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் வாழக்கூடிய பாம்புகளின் செயல்கள் மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும் பொழுது வினோதமாக உள்ளது. அதன் தோலை கழட்டுவதற்கு கூட ஒரு காரணம் வைத்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பல்லிகள், ஆமைகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து ஊர்வனவும் தன்னுடைய தோலை தானாகவே கழட்டிக் கொள்ளும். அவற்றில் பெரும்பாலானவை துண்டுகளாகவோ அல்லது செதில்களாகவோ செய்தாலும், பாம்புகள் மட்டுமே தங்கள் தோலை முழுவதுமாக கழட்டும்.
அந்த வகையில், ஊர்வன விலங்குகளில் ஏன் பாம்புகள் தங்களின் தோலை கழட்டுக்கின்றன என பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பதிவில் பார்க்கலாம்.
பாம்புகள் ஏன் தோலை கழட்டுகிறது?
பாம்புகள் தன்னுடைய தோலை கழட்டுவதை “எக்டிசிஸ்” என்பார்கள். பாம்பின் வயது, இனம் மற்றும் சூழலைப் பொறுத்து இந்த உதிர்தல் மாறுபடும். பாம்புகள் பற்றிய ஆய்வில், உதிர்தல் மாதத்திற்கு ஒரு முறை முதல் வருடத்தில் ஒரு சில முறை வரை வழக்கமாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளம் பாம்புகள் வளர்ந்து வரும் போது, பெரிய பாம்புகளை விட அதிகமாக தோலை உதிர்க்கிறது. ஒரு பாம்பு அதன் தோலை உதிர்க்கத் தொடங்குவதற்கு முன்பு சில அறிகுறிகளை காட்டும்.
அதாவது, தன்னுடைய தோலை கழட்டுவதற்கு முன்னர் அதன் கண்கள் நீல நிறமாகவும் ஒளிபுகாதது போன்று இருக்கும். அடிக்கடி சாப்பிடாமல் மந்தமாக இருக்கும். அப்படி பாம்புகள் இருப்பதை கண்டால் அது தன்னுடைய தோலை உதிர்க்கப்போகிறது என்று அர்த்தம்.
பாம்புகள் வளரும் உடல்களுக்கு ஏற்ப தங்கள் பழைய தோலை முழுவதுமாக உதிர்ப்பது அவசியம். அவை வளரும் போது அதன் தோல் வளராது. பழைய தோலின் அடியில் ஒரு புதிய தோல் உருவாகுத். அப்போது பழைய தோல் அதுவாகவே உதிர ஆரம்பிக்கும்.
நன்மைகள்
- பாம்புகள் தங்களின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் வளர்ச்சி தான். இதனால் பாம்பின் தோலில் குடியேறி இருக்கும் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் அகற்றப்படுகிறது.
- பழைய தோலை உதிர்ப்பதால் ஏற்கனவே தோலில் இருந்த காயங்கள் மாறும். தோலின் ஆரோக்கியம் பராமரிக்கப்பட்டு புதிய தோல் பளபளப்பாக இருக்கும்.
- பாம்புகள் தோலி உதிர்தல் காலம் அருகில் இருக்கும் பொழுது பாறை, மரம் அல்லது கடினமான மேற்பரப்பில் தேய்க்கும். மூக்கு பகுதியில் இருந்து தேய்க்க ஆரம்பித்து படிபடியாக பழைய தோலை வெளியேற்ற ஆரம்பிக்கும். பெரும்பாலான பாம்புகள் நிலத்தில் இந்த செயன்முறையை செய்தாலும், சில பாம்புகள் நீரில் தன்னுடைய தோலை கழட்டும்.
பார்த்தால் கொத்துமா?
பாம்பு தோலை உரிக்கும் பொழுது கொத்துவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. ஏனெனின் பாம்பு மிகவும் சோர்வாக இருக்கும். அதே சமயம் தோலை எப்படியாவது முழுமையாக உரித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்.
சிலர் பாம்பு தோல் உரிப்பதை பார்த்தால் அதனை அடிப்படி, தண்ணீர் ஊற்றுவது, ஏதாவது தூக்கி அடிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
அப்படியான நேரங்களில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக கொத்தும். பாம்பு தோலை உரிக்கும்போது கூட அதை தொட்டலோ, அதற்கு அருகில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். எவ்வேளையும் பாம்புகளுக்கு எச்சரிக்கையுடன் அணுகுவது பாதுகாப்பானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |