இலங்கைப் பெண்ணை காதலித்தது உண்மை தான்... ஆனால்! திடீரென ஒப்புக்கொண்ட அர்னவ்
திவ்யா கொடுத்த பேட்டியில் இலங்கைப் பெண்ணை ஏமாற்றியதாக கூறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு திடீரென கட்சி மாறியிருக்கிறார் அர்னவ்.
அர்னவ்-திவ்யா விவகாரம்
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள்.
திருமணம் முடித்து கொஞ்சநாளில் இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்த திவ்யா பல குற்றச்சாட்டுக்களை வைத்ததால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் அர்னவ்.
பின்னர் கர்ப்பமாக இருந்த திவ்யா அண்மையில் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பிரல தொலைக்காட்சில் அர்னவ் மீது பல குற்றச்செயல்களை அடுக்கடுக்காய் ஆதாரத்துடன் பேசியிருந்தார்.
இதில் அர்னவ்வின் பிடியில் பல பெண்கள் சிக்கியிருப்பதாகவும் அதில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உண்மையை ஒப்புக் கொண்ட அர்னவ்
திவ்யா சொன்ன குற்றங்களுக்கெல்லாம் பதிலளித்திருக்கிறார் அர்னவ். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, திவ்யா நான் செய்யாத குற்றங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இது எல்லாத்துக்கும் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் காட்டட்டும். அவ சொல்றது எல்லாமே பொய். இலங்கையில் இருந்த பெண் என்னுடைய முன்னாள் காதலி. நானும் அவளும் காதலித்தோம். ஆனா நா அவங்க குழந்தையெல்லாம் கலைக்கல.
இதெல்லாம் திவ்யா சொன்ன பொய். அப்படியே நான் செய்து இருந்தாலும் ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்க. திவ்யா ஏதோ பெரிய தப்பு பண்ணுறாங்க அதையெல்லாம் மறைக்குறதுகாகத்தான் இந்த மாதிரி தப்பான விடயம் எல்லாம் பண்ணுறாங்க.
அதுமட்டுமில்லாம திவ்யா பற்றிய பல உண்மைகள் எனக்குத் தெரியும் அதை எல்லாவற்றையும் நான் கோர்ட்டில் தான் காட்டுவேன். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் ஈஸ்வரன் தான். அவன் சொல்லித்தான் திவ்யா இதையெல்லாம் செய்கிறாள்.
இதுக்கு மேல அவங்க ஏதாவது பண்ணினா நா சும்மா இருக்க மாட்டேன். எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டியது இருக்கும். அவ குழந்தைக்காகத்தான் எதையும் சொல்லாம இருக்கேன் நா எப்பவும் அப்படியே இருக்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார்.