பெண் குழந்தையை பெற்றெடுத்த செவ்வந்தி சீரியல் நடிகை! அர்ணவ்வை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவரது கணவர் அர்ணவ்வை ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
நடிகை திவ்யா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான செவ்வந்தி சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா. இவர் பிரபல ரிவியில் செல்லம்மா சீரியலில் நாயகனாக நடித்து அர்ணவ்வை காதலித்து மதம்மாறி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் ரகசிய திருமணம் வெளியுலகிற்கு தெரியாத நிலையில், சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும், திருமண புகைப்படத்தினையும் வெளியிட்டார்.
பின்பு இருவருக்கும் இடையே பயங்கர கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து சீரியலில் நடித்து வருகின்றார்.
ஆனால் திவ்யா ஏற்கனவே திருமணமாகி அவருக்கு 5 வயதில் மகள் இருக்கும் நிலையில், இரண்டாவதாகவே அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டார்.
இப்படியொரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரால் தனக்கும் தனது குழந்தைக்கும் ஆபத்து என்று புகார் அளித்திருந்தார்.
அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் திவ்யா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இதனை அவதானித்த திவ்யாவின் ரசிகர்கள் அர்ணவ்வை திட்டித்தீர்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.