நான் கேவலமானவன் என்றால்... அவள் நல்லவளா? ஆதாரத்துடன் பேசிய அர்னவ்
சீரியலில் நடித்து தம்பதிகளாக மாறிய அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரின் சர்ச்சை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அர்னவ்-திவ்யா சர்ச்சை
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணம் செய்து கொஞ்ச நாளில் பல கருத்து முரண்பாடுகள் காரணமாக தனித் தனியே பிரிந்து விட்டார்கள். பிரிவிற்குப் பின்னர் திவ்யா கர்ப்பமாக இருந்து தற்போது ஒரு பெண் குழந்தையும் பிரசவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வளவு காலம் அமைதியாக இருந்த திவ்யா திடீரென பல ஆதாரத்துடன் பல உண்மைகளை தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் அர்ணவ் ஆண், பெண் என பாராமல் பலரிடம் விதம் விதமான கதைகளை விட்டு பணம் பறித்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி கர்ப்பமாக்கி இருக்கிறார்.
இதற்கான பல ஆதாரங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார் திவ்யா.
அர்ணவ்வின் பதில்
திவ்யாவின் ஆதாரத்துடன் வெளியிட்ட பல விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அர்னவ் புதிய புதிய விடயங்களை பேசியிருக்கிறார்.
அதில் திவ்யாவும் என்னுடன் இருந்துக் கொண்டு பலரிடம் பழகியதாகவும் அவர் சொல்லுவதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரும் சில ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட காணொளியில் கூறியிருக்கிறார்.
அந்த காணொளி இதோ.