தாலிகட்டி ஏமாற்றிய கணவர்! கர்ப்பிணி நடிகைக்கு நடந்த வளைகாப்பு
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவிற்கு சக நடிகர், நடிகைகள் சர்ப்ரைஸாக வந்து வளைகாப்பு நடத்தியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அர்னவ் திவ்யா ஜோடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும், வேறொரு ரிவியில் செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவ்வும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக காவல்நிலையம் வரை சென்றனர்.
இருவரும் தங்களுக்குள் மாறி மாறி புகார் அளித்துக்கொண்ட நிலையில், அர்ணவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவ்துள்ளார்.
அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட திவ்யா அதிகமான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் நடிகைகள்
இந்நிலையில், திவ்யாவின் வீட்டிற்கு திடீரென வருகை தந்த சக நடிகர் நடிகைகள், நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வின் போது திவ்யாவின் பெற்றோர்களும் உடன் இருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
வளைகாப்பு முடிந்த பின்பு பிரபலங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ள காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.