இலங்கைப் பெண் உட்பட பல பெண்களை ஏமாற்றிய அர்னவ்: உண்மைகள் அம்பலம்
திருமணம் செய்து குழந்தையையும் கொடுத்து விட்டு ஏமாற்றிய அர்னவ் மீது பல ஆதாரத்து பேட்டி கொடுத்திருக்கிறார் மனைவி திவ்யா.
அர்னவ்-திவ்யா விவகாரம்
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இதில் அர்னவ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்கள் இருவரும் இரு மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள்.
திருமணம் முடித்து கொஞ்சநாளில் இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்த திவ்யா பல குற்றச்சாட்டுக்களை வைத்ததால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் அர்னவ்.
பின்னர் ஜாமினில் வெளியில் வந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த வேளையில் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் ஆனால் இதை பற்றி கணக்கில் கொள்ளாத அர்னவ் மீது குழந்தை பிறக்கும் வரை காத்திருந்து பல தகவல்களை ஆதாரத்துடன் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
வெளிச்சத்திற்கு வந்த அர்னவ்வின் முகம்
அவர் குறித்த பேட்டியில், அர்னவ்வினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் இன்ஸ்டாகிராமில் மெஜேஸ்களையும் அழைப்பையும் எடுத்து தெரிவித்திருக்கிறார்.
அதில் இலங்கையைச் சேர்ந்த பிரசன்னா என்றப் பெண் ஒருவரையும் காதலித்து கர்ப்பமாக்கி தெருவில் விட்டுச் சென்றிருக்கிறார் என சொல்லி விட்டு அதற்கான ஆதாரத்தையும் காட்டியிருக்கிறார்.
மேலும், இலங்கைப் பெண்ணான பிரசன்னா என்ற பெண் பற்றி பல தகவல்களை நேசம் அண்ணா என சொல்லப்படும் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார்.
மேலும் அந்தப் பெண் கர்ப்பமானவுடன் அபார்ஷன் பண்ணனும் என்று சொல்ல நான் தான் அவனுக்காக ஹாஸ்பிடலுக்கு அபார்ஷன் பண்ணுவதற்காக கூட போனேன் என்று சொல்லி இருக்கிறார்.
இது மட்டுமல்ல மலேசியாவில் ஒரு பெண்ணிடமும், திருநங்கை பெண்ணொருவரிடம் இப்படி ஆசைக் காட்டி பொய்களை சொல்லி பணம் பறித்திருக்கிறார் அர்ணவ்.
இவை ஒவ்வொன்றிற்கும் பல ஆதாரத்தை கையில் வைத்து அப்படியே கூறியிருக்கிறார் திவ்யா ஸ்ரீதர்.