உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2023: இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதலாம் திகதி உலக நுரையீரல் புற்றுநோய் அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் இந்த கொடிய நோயை அழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் இந்த தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு புற்றுநோய் வகையாகும். இந்த நுரையீரல் புற்றுநோய் தான் உலகளவில் அதிக புற்றுநோய் இறப்புக்களுக்கு காரணமாக இருக்கிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு தான் இந்த புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.
இதை தவிர காற்று மாசடைவதாலும், சிஓபிடி, கதிரியக்க சிகிச்சை அல்லது குடும்ப புற்றுநோய் என்பனவும் காரணமாக இருக்கிறது. இந்த புற்றுநோய் இந்தியாவில் மாத்திரம் 1.46 மில்லியனிலிருந்து 2025இல் 1.57 மில்லியனாக அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
வறட்டு இருமல்
மூச்சுவிடுவதில் சிரமம்
இருமல்
எச்சிலில் ரத்தக்கசிவு
நெஞ்சுவலி
விழுங்குவதில் சிரமம்
மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ச்சியாக வலி
எடை குறைதல்
எலும்பு வலி
தலைவலி
எவ்வாறு தடுப்பது
இந்த நுரையீரல் புற்றுநோயை தடுப்பதற்கு உறுதியான எந்த வழியும் இல்லை. ஆனால் இவற்றின் ஆபத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிப்பதை நிறுத்துதல்
புகைப்பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருத்தல்
ஆரோக்கியமான உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை தெரிவு செய்து உண்ணுதல்
தினமும் உடற்பயிற்சி செய்தல்
நச்சு இரசாயன வெளிப்படுதலிலிருந்து பாதுகாப்பாக இருத்தல்
வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசுபடும் இடங்களில் இருந்து விலகியிருத்தல்
சாப்பிட வேண்டிய உணவுகள்
இயற்கையாகவே பூண்டில் இருக்கும் பைட்டோநியூண்ட்ரியண்ட்டான அல்சின் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது, அத்துடன் புற்றுநோய் எதிர்ப்பியாகவும் செயல்படுவதுடன் நுரையீரலை நோய்களில் இருந்தும் பாதுகாப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கீரைகளில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது, அடிக்கடி உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, சளி தொல்லை இருக்கும் நாட்களில் இஞ்சியுடன் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் பலனை தரும்.
அப்ரிகாட் பழத்தில் உள்ள விட்டமின் சி, விட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லைகோபீன் போன்ற சத்துக்கள் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
ப்ரோக்கோலியில் இருக்கும் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நுரையீரலை பாதுகாப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது, எனவே தினமும் சிறிதளவேனும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
அவகோடாவின் விட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின் மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, அவகோடாவை சாப்பிட்டு வந்தால் ஆர்திரிடிஸ், நுரையீரல் கோளாறுகளை பாதுகாப்பதாக சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |