இந்த பொருள் சேர்த்து எண்ணெய் செய்து போடுங்க- வழுக்கையிலும் முடி முளைக்கும்!
தலைமுடி என்பது ஒருவரின் அழகையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகும். ஆனால், இன்று பலரும் சந்திக்கும் பொதுவான சிக்கலாக தலையின் வழுக்கை (Baldness / Alopecia) பிரச்சனை பார்க்கப்படுகிறது.
இது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலாருக்கும் ஏற்படக்கூடியது.
“வழுக்கை” என்பது சில நேரங்களில் மரபுரிமையால் வரும், சிலருக்கு தவறான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், அல்லது தலையில் சரியான பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களாலும் ஏற்படும்.
இந்த பிரச்சனையை விலை உயர்ந்த கெமிக்கல் சிகிச்சைகள் இல்லாமல், இயற்கை முறைகளில் கவனித்து வந்தால் இலகுவாக நிரந்தர தீர்வை பெற முடியும்.
அதிலும் குறிப்பாக பசுமை நிறைந்த மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் வழியாக முடி வளர்ச்சியை தூண்ட முடியும்.
அந்த வகையில், வழுக்கை பிரச்சனையுள்ளவர்கள் எப்படி நிவாரணம் பெறலாம். அதற்கு வீட்டில் செய்து பயன்படுத்தக்கூடிய எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தலையின் வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள்
1. சிலருக்கு தானாகவே வந்த முடி உதிர்வு அல்லது வழுக்கை ஏற்படும். இது பரம்பரை வழியாகவும் ஏற்படும். இதனை எப்படி கண்டறியலாம் என்றால், பெரும்பாலான ஆண்களுக்கு மேல் தலைமுடி வழுக்கை (Male Pattern Baldness) ஆக இருக்கும்.
2. அதிகமான மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் இருப்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். "Telogen Effluvium" எனப்படும் இந்த நிலை அதிகமாக பெண்களுக்கு தான் ஏற்படும்.
3. பெண்களில் PCOS, கர்ப்பம், பிரசவம், மெனோபாஸ் போன்ற நிலைகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்களின் தலைமுடி உதிர்வு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும். அதே சமயம், ஆண்களுக்கு டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) அதிகரிப்பு வழுக்கை ஏற்படும்.
4. இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் D, B12 உள்ளிட்ட சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு அவசியமாகும். இந்த சத்துக்கள் ஜங்க் உணவுகள், அதிக எண்ணெய், சர்க்கரை, உப்புக் கலவைகளில் இருக்காது. இது போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் தலை வழுக்கை ஆகும்.
5. கீமோதெரபி, டிப்ரஷன் மருந்துகள், ஹார்மோன் சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ காரணங்களாலும் முடி உதிர்வு அதிகமாகி வழுக்கை ஏற்படும். அதே போன்று சிகை அலங்காரமாக ஹேர் டை, ஹீட் டிரிட்மெண்ட், ஸ்டிரெயிட்னிங் போன்ற வேலைகள் செய்து கொண்டாலும் தலைமுடி உதிரும்.
6. ரோசியா, டர்மடைட்டிஸ், புற்றுநோய், பாக்டீரியா அல்லது பூஞ்சை போன்ற தொற்றுகள் தலைமுடி வளர்ச்சியை தடுக்கும். உதாரணமாக Dandruff அல்லது பசை சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளை கூறலாம். இவை தலைமுடியின் வேர்களில் தாக்கம் செலுத்தும்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- பப்பாளை இலை- 5–6 இலைகள்
- வெந்தயம்- 2 மேசைக்கரண்டி
- காஸ்டர் ஆயில் (அவாரம் எண்ணெய்) -100 மில்லி
- தேங்காய் எண்ணெய்- 200 மில்லி
- பச்சை கற்பூரம் -1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணெய் தயாரிப்பு படிமுறை
வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின்னர், கறிவேப்பிலையும் பப்பாளை இலைகளையும் நன்கு கழுவி, சிறிது தண்ணீருடன் விழுது போல அரைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டர் ஆயில் இரண்டையும் ஒன்றாக ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் இலை விழுதையும், ஊறவைத்த வெந்தயத்தையும் எண்ணெயுடன் கலந்து அடுப்பில் மிதமான வெப்பநிலையில் காய்ச்சவும்.
நன்கு காய்ச்சி எடுக்கும் பொழுது கறிவேப்பிலை கறுப்பு நிறமாக மாறும் அந்த சமயம், எண்ணெய்யை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
கடைசியாக வடிகட்டிய எண்ணெய்வுடன் பச்சை கற்பூரம் சேர்க்கலாம். கற்பூரம் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
பயன்படுத்தும் முறை
- இந்த எண்ணெய்யை வாரத்தில் 2–3 முறை இரவு தூங்குவதற்கு முன் தலைமீது நன்கு தடவி, மெதுவாக 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
- அடுத்த நாள் காலை மிதமான ஹெர்பல் ஷாம்பூ போட்டு தலைமுடியை நன்கு அலசலாம்.
- தொடர்ந்து 4–6 வாரங்கள் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்து புதிய தலைமுடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் கூட தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
- அதே சமயம், பச்சை காய்கறிகளுடன் கூடிய ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடிப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |