கருஞ்சீரகத்தை பற்றிய 6 உண்மைகள்!
நமது உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கருஞ்சீரகம் மட்டும் போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஏனெனில் கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியம் மற்றும் பொலிவுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அந்த வகையில் கருஞ்சீரகத்தில் பயன்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
யாமறியாத கருஞ்சீரகத்தின் பயன்கள்
கருஞ்சீரகத்தில் செய்த பானங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.
இவ்வாறு குடிப்பதனால் இதய நோய் எம்மை நெருங்காமல் பாதுகாத்துக்கொள்ளவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நீரழிவு நோயால் பாதிக்கபட்டவர் இதில் பானம் செய்து தினமும் குடித்து வந்தால் நீரழிவு நோயை கட்டுபடுத்தலாம். இந்த பானத்தை அதிகாலை வெறும் வயிற்றில் கருப்பு தேநீருடன் கலந்து அருந்துவது சிறந்தது.
கருஞ்சீரகம் புற்று நோயிலிருந்து எம்மை பாதுகாக்கும் இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் புற்று நோய் தாக்கத்தை குறைக்கிறது. உதாரணமாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் நோயாளருக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாகும். இதனை தேநீருடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதனால் ரத்த அழுத்தம் சீறாக அமையும்.
கருஞ்சீரக எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் தேனுடன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட முடியும்.
சிறுநீரகத்தில் கற்கள், வலி, தொற்று உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் உதவுகிறது. இந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது.