மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? அறிகுறியும் தீர்வும்...
பொதுவாக மூச்சுத்திணறல் ஒருவருக்கு ஏற்பட்டால், ஆஸ்துமா நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதிக கூட்டம் உள்ள இடங்களிலோ அல்லது நெரிசல் உள்ள இடங்களிலோ சென்றால் ஒருவிதமான மூச்சு திணறல் தான் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆஸ்துமா உள்ளவர்கள் பல ஆண்டுகளாக இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏன் உண்டாகிறது?
மூச்சுத்திணறல் ஏற்பட பல காரணங்கள் உண்டு மூக்கடைப்பு உண்டாகும் போது மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பது பொதுவானது.
அடிக்கடி இவை உண்டானால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நிமோனியா, ஆஸ்துமா போன்ற நுரையீரலுடன் தொடர்புடைய நோயாக இருக்கலாம்.
ரத்த சோகை தீவிரமாக இருக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம். இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜனை அனுப்ப போதிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையில் மூச்சுத்திணறல் உண்டாக கூடும்.
இதைத்தவிர, பதற்றம், பயம், ஒவ்வாமை போன்றவற்றாலும் கூட மூச்சுவிடுதலில் சிரமம் உண்டாக வாய்ப்புண்டு.
அறிகுறிகள்
ஆஸ்துமா
ஆஸ்துமா வந்துவிட்டால் ஒருவரில் நுரையீரலானது சுருங்கி, வீக்கம் அடைய செய்யும். மேலும் அதிக சளியை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கலாம்.
ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் நெபுலைசர் மற்றும் இன்ஹேலர் உதவியுடன் இந்த பாதிப்பை குறைக்காலம்.
அதி தீவிரமான ஆஸ்துமா பாதிப்பு என்பது நீண்ட கால உடல் நோய்களால் ஏற்படுகின்றன.
நிமோனியா
நிமோனியா இதுவும் நுரையிரலில் ஏற்படுகிற ஓர் பாதிப்பு தான். வைரஸ் பாக்டீரியா அல்லது பூஞ்சான் தொற்றினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 2 உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை தான் அறிகுறிகள். எக்ஸ்ரே மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.
மூச்சு விடுவதில்
சிக்கல் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டால் அது தான் ஆஸ்துமாவிற்கான முதல் அறிகுறியாகும்.
மூச்சு குழாய்களை வீக்கம் அடைய செய்வதாலும், அவை சுருங்கி விடுவதாலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நுரையீரலுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாது.
நிமோதெராக்ஸ்
நுரையிரலுக்கும் மார்புகூட்டிற்கும் இடையில் அளவுக்கு அதிகமான காற்று சேர்ந்திருப்பதைத் தான் நிமோதெராக்ஸ் என்கிறார்கள்.
அதிகமாக புகை பிடிப்பவர்கள், chronic obstructive pulmonary disease என்ற பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோதெராக்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இவர்களுக்கு மூச்சுத்திணறல் மட்டுமல்லது நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு, அதீத வியர்வை ஆகியவை ஏற்படும். சிடி ஸ்கேன் மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.
இருமல்
பொதுவாக வெளியில் உள்ள தூசு, புகை, சிறிய துகள்கள் போன்றவை மூச்சு குழாயில் படும்போது ஒருவித எரிச்சல் உணர்வை அந்த பாதையில் ஏற்படுத்தும்.
அடுத்து மார்பு மற்றும் வயிற்றில் உள்ள தசைகள் உங்கள் நுரையீரலில் இருந்து காற்றை வெளியேற்ற உங்கள் மூளைக்கு சமிக்ஞை செய்யும் நரம்புகளைத் தூண்டுகிறது.
இதனால் இரும்பல் ஏற்படுகிறது. இதுவே அதிகம் அடைந்தால் ஆஸ்துமா அட்டாக்காக மாறுகிறது.
இதயம் செயலிழப்பு
உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியவில்லை என்றால் அதைத் தான் இதயம் செயலிழந்துவிட்டது என்கிறார்கள்.
இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லக்கூடிய வால்வுகளில் அடைப்பு இருப்பது, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இதற்கு காரணமாய் இருக்கிறது.
இதயம் செயலிழப்பிற்கு முதன்மையான அறிகுறிகள் இருமல், உடல் எடை திடீரென்று அதிகரிப்பது, நெஞ்சு வலி, இதயத்துடிப்பு அபரிதமாக இருப்பது ஆகியவை முதன்மையான அறிகுறிகளாக இருக்கிறது.
வேகமாக மூச்சுவிடுதல்
மூச்சு சரிவர செல்லவில்லை என்றால் ஒருவருக்கு வேகமாக மூச்சு விடும்படி ஆகிவிடும்.
நுரையீரலில் இருந்து காற்றை முழுவதுமாக வெளியேற்றுவதால் ஏற்படும் பிரச்சனையால், தானாகவே அந்த நபரை வேகமாக சுவாசிக்க வைக்கிறது. விரைவான சுவாசத்தின் போது, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
பரிசோதனைகள்
மூச்சுவிடுதலில் சிரமத்தை அடிக்கடி சந்தித்தால் மருத்துவரை அணுகுவதன் மூலம் சிகிச்சை பெற முடியும்.
இதற்கு, ரத்தபரிசோதனை மூலம் ஆக்ஸிஜன் அளவு பரிசோதிக்கப்படுகிறது. நுரையீரல் செயல்பாடு, மார்பு பகுதியில் எக்ஸ்ரே, ஒவ்வாமை பரிசோதைகள், தொண்டை உட்பாகத்திலிருந்து பெறப்படும் மாதிரியை கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
என்ன செய்யலாம்?
தினமும் 20 நிமிடங்கள் ஒதுக்கு மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும். வாயை விசில் அடிப்பது போல் குவித்து மூச்சை மூக்கு வழியாக ஆழமாக சுவாசித்து நுரையீரலில் இருக்கும் மொத்த காற்றையும் வெளியேற்ற வேண்டும்.
அடுத்து, மருத்துவத்துறையில் மூச்சுப்பயிற்சிக்கு தனி பயிற்சிகள் அறிவுறுத்தப்படுகிறது. நடக்கும் போது சில வினாடி நின்று நன்றாக மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். அதன் பிறகு சிறிது தூரம் நடந்து பின் நின்று மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
மூச்சு பயிற்சி
நோயாளிகள் மூச்சுப் பயிற்சி செய்தால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறைகிறது. அடுத்து, நோயாளிகளின் நிலையை அறிய, இந்த பயிற்சியை ஒரு பரிசோதனையாகவும் மேற்கொள்ள முடியும்.
மூச்சை இழுத்து பிடித்து வைத்திருக்கும் நேரம் குறைந்தால், அது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறி. அந்த நோயாளி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
நோயாளியால், மூச்சை இழுத்து பிடித்திருக்கும் நேரத்தை படிப்படியாக அதிரிக்க முடிந்தால், அது நேர்மறையான அறிகுறி.
ஆரோக்கியமாக இருப்பவர்களும் இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இது நுரையீரல்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
மூச்சுத்திணறல் உள்ளவர்கள் அடிக்கடி, ஆப்பிள், வால்நட்ஸ், பெர்ரி, ப்ரோக்கோலி, காய்ந்த மிளகாய், இஞ்சி, ஆளி விதைகள், மஞ்சள், பூண்டு போன்ற பொருட்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்,.
தண்ணீர்
நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும்.
தண்ணீர் பருகுவது மூச்சு திணறலுடன் தொடர்புடையது. ஏனெனில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் தண்ணீருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
இதனால் நுரையீரல் உலர்வடைந்தால் வீக்கம் உண்டாகும். எனவே தினமும் குறைந்தது 6-8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுவதையும் தடுக்கிறது.
முதலுதவி
மூச்சு திணறல் உண்டானவர்கள், செய்ய வேண்டியது, முதலில் முன்புறமாக சாய வேண்டும்.
அடுத்து, தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.