கேஸ் பாவணையாளருக்கான முக்கிய எச்சரிக்கை: நுரையீரல் புற்றுநோய் ஆபத்து!
வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியால் உலகம் முழுவதும் நினைத்து பார்க்க முடியாத அளவு மாற்றம் எற்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் எமது உடலுக்கு நல்லதல்ல.
காற்று மாசுபாடு
இதன்படி நாம் சமைப்பதற்கு கேஸ் அடுப்பு பயன்படுத்துகிறோம் இந்த கேஸ் அடுப்பு பாவனையால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவருகிறது.
இதனால் காற்று மாசுபாடுத்தபடுகிறது, இதனை சுவாசிக்கும்போது சுவாச பிரச்சினைகள் மற்றும் கருவளர்ச்சி போன்ற பாரதுாரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கேஸ் அடுப்பு பாவணையால் ஏற்படும் பாதிப்புக்களை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
பாதிப்பு
பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் சமைப்பதற்கு கேஸ் அடுப்புக்களை பயன்படுத்துவார்கள். இதனால் காலப்போக்கில் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அல்சைமர், உளவியல் சிக்கல்கள், ஆர்டிசம், ரெட்டினோபதி போன்ற நோய் நிலைமைகளை ஏற்படுத்தும்.
மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கேஸ் பாவணையை குறைப்பது மிக சிறந்ததாகும். இதனால் கருவளர்ச்சி பாதிப்பு மற்றும் எடை குறைந்த சிசுக்கள் பிறக்கும் போன்ற பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. மற்றும் குழந்தைகளும் இந்த வாயுக்களை சுவாசிப்பதை குறைக்க வேண்டும்.
பாதிப்புக்களை குறைப்பது எப்படி?
கேஸ் பாவனையை முற்றாக தடுக்க முடியாது, ஆனால் குறைக்க முடியும் இவ்வாறு குறைப்பதனால் சுவாசப் பிரச்சினைகளிலிருந்து விடுப்பட முடியும்.
சமையல் எரிவாயுவிலிருந்து வெளிவரும் வாயுக்கள் கண் பார்வையும் குறைவடையச் செய்கிறது மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஏற்படும் போது ஜன்னல்களை திறந்து வைப்பது மிகவும் அவசியம்.
அடுப்பை 6 மாதத்திற்கு ஒருமுறை கடைகளில் கொடுத்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வாயு வெளியேறுவது குறைவாக இருக்கும்.
சமைக்கும் நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களில் அடுப்பை வைத்து சமைக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுபடுத்த முடியும்.