Viral video: அடேங்கப்பா என்னவொரு அழகு.. கொத்த வந்த பாம்பை தடவிக் கொண்டே ரசித்த இளைஞன்
“அடேங்கப்பா என்னவொரு அழகு..” தன்னை கொத்த வந்த பாம்பை மடக்கி பிடித்து ரசித்த இளைஞனின் காணொளி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாம்புகள் பற்றிய காணொளிகள் அதிகமாகி வருகின்றன.
முன்னர் எல்லாம் பாம்புகளை கண்டால் 100 அடிக்கு மேல் தள்ளி நடந்த மக்கள், தற்போது அது செய்யும் சேட்டைகளை காணொளிகளாக பதிவு செய்து சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்கள்.
பாம்பை கடவுளாக பார்க்கும் மக்களுக்கு மத்தியில் உணவாக சாப்பிடும் பழக்கங்களும் கணிசமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்னவொரு அழகு..
இந்த நிலையில், தன்னை கொத்த வந்த பைத்தன் பாம்பை மடக்கி பிடித்த இளைஞன் அதன் வாய் பகுதியை பிடித்தவாறு அதன் உடலை தடவிக் கொடுத்து, “என்னவொரு அழகிடா..” எனக் கூறியப்படி ரசிக்கிறார். பாம்பின் தசைகளில் இருக்கும் கவர்ச்சி பற்றியும் வர்ணிக்கிறார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், “ ஏய் அது பாம்பு டா..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதே சமயம், ரசிக்கும் திறன் அதிகமாக கொண்ட நண்பர்களுக்கு பகிர்ந்து சிலர் அவர்களை கலாய்த்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |