அதிகம் பொய் சொல்வதில் பெண்கள் தான் கில்லாடிகள்: ஆய்வின் மூலம் வெளியான உண்மை!
பொதுவாக நாம் ஏதாவது தவறு செய்து விட்டால் அதை மறைப்பதற்கு திடீரென வாயில் தோன்றுவதை அடித்து விடுவோம். இவ்வாறு ஒரு பொய் சொன்னால் அதை சமாளிக்க அடுத்தடுத்து பொய்கள் சொல்லிக்கொண்டே போகவேண்டும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண் அல்லது பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பொய் சொல்லி இருப்போம். இதில் ஒரு சிலர் பொய்யை சொல்லி விட்டு அதிலிருத்து தப்பித்து விடுவார்கள், ஒரு சிலர் வசமாக சிக்கிக் கொள்வார்கள்.
ஆனால் இப்படி அதிகம் பொய் சொல்லுவது பெண்கள் தான் என ஆய்வு கூறுகின்றது.
அதிகம் பொய் சொல்லும் பெண்கள்
பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளரான மேரி கோல்ட் என்பவர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவரது ஆராய்ச்சி என்னவென்றால் அதிகம் பொய் சொல்வது யார் என்பது தான். இது என்ன விபரீத ஆராய்ச்சி என்று நாம் சித்திப்போம்.
ஏனெனில் நாம் எப்போதும் உண்மையை மட்டும் சொல்வது கிடையாது. சில நன்மைக்காகவும் பொய்கள் சொல்லி இருப்போம். இதற்கெல்லாம் எதற்கு ஆய்வு என்றுக் கேட்டு முடிப்பதற்குள் அவர் கட்டுப்பிடித்து விட்டார்.
திருமணமான பெண்கள் தான் அதிகம் சொல்லுகிறார்கள் என்று. இதை எப்படிக் கண்டுப்பிடித்தீர்கள் என்றுக் கேட்டால், திருமணமான பெண்கள் ஒருக் குடும்பத்தை எப்படி நடத்தும் அளவிற்கு அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள்.
அதனால் அவர்கள் அதீத வேலைக்காரணமாகவும் அல்லது வேறு ஏதேனும் யோசனைக் காரணமாகவும் சில தவறுகளை செய்துவிடுவார்கள். அதற்காக கணவனிடம் பொய் சொல்லுவார்கள்.
இதில் ஒரு சில பெண்கள் பொய் சொன்னால் கணவன் கண்டுப்பிடித்து விடுவானே என நினைத்து கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் பொய்யும் கலந்து பேசுவார்கள்.
மேலும், சில பெண்கள் தன்குடும்பத்திற்காகவும் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் பொய் சொல்வார்கள்.
ஒரு சிலர் கணவன் விருப்பப்பட வேண்டும், அதிகம் நேசிக்க வேண்டும், அதிகம் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பொய் சொல்வார்களாம்.
இப்படி பெண்கள் தங்களுடைய குடும்ப மகிழ்ச்சிக்காகவும், உறவுகளில் விரிசல் விழக்கூடாது என்பதற்காகவும் தான் நிறைய பொய்கள் சொல்கிறார்கள் என அந்த ஆய்வின் முடிவில் தெரிவித்திருக்கிறார்.