தனுஷ், ஐஸ்வர்யா இடையே அடுத்து நடக்கவிருப்பது என்ன? உண்மையை உடைத்த பிரபல நடிகர்
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்தில் அடுத்து நடக்கவிருக்கும் விடயத்தைக் குறித்து பிரபல நடிகர் பயில்வான் சில தகவல்களைக் கூறியுள்ளார்.
நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தனது 18 வருட திருமண வாழ்க்கையினை முறித்துக்கொள்வதாக கடந்த மாதம் 17ம் தேதி அறிவித்திருந்தனர்.
தற்போது வரை இதற்கான காரணம் தெரியாத நிலையில், இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்களா? அடுத்து இவர்கள் எடுக்கப்போகும் முடிவு என்ன என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
ஐஸ்வர்யா தனது தந்தையின் கோபத்தினை தணிக்க தனுஷுடன் ஒப்புக்கொண்ட நிலையில், தனுஷ் தரப்பில் தந்தையின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் திருப்பதிக்கு அனுப்ப கஸ்தூரி ராஜா திட்டமிட்டுள்ளதாக அண்மையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன், இந்த தகவல் உண்மை என்றும் இவர்கள் இருவரின் விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர் கூறுகையில், ஐஸ்வர்யாவிடம், தந்தையின் கோபத்தினை சுட்டிக்காட்டி லதா ரஜினிகாந்த் தனுஷ் உடன் சேர்ந்து வாழ மீண்டும் பேசி வருகின்றாராம். பசங்களுக்காக ஐஸ்வர்யா யோசனையும் செய்து வருகின்றாராம்.
தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் உணர்ச்சிவசப்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இருவரும் மீண்டும் இணைய அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.