அவசரத்திற்கு பொது கழிப்பறைக்கு செல்பவரா நீங்க? இந்த ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக அடிக்கடி வெளியில் செல்பவர்கள் பொதுக் கழிப்பறையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன்படுத்தும் போது கழிப்பறை சுத்தமாக இருந்தாலும் கண்களுக்கு தெரியாத சில நுண்கிருமிகள் நம்மை தாக்குகின்றன.
இதனால் பெண்களுக்கு சிறுநீரகம், மற்றும் மலம் அகற்றும் பகுதிகளில் அதிகமான தொற்றுக்கள் வரக்கூடும்.
அந்த வகையில் பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது எந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து தெளிவாக பார்க்கலாம்.
பொது கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பவரா நீங்க?
1. பொதுக் கழிப்பறை பயன்படுத்தும் போது வீட்டிலுள்ள கழிப்பறை போல் நீண்ட நேரம் அமர்ந்திருக்க கூடாது. இதனால் மற்ற கிருமிகள் நமது உடலுக்கு செல்ல இலகுவாக இருக்கும்.
2. சிறுநீர், மலம் கழிக்கும் போது சிலர் நீண்ட நேரம் கழிப்பறையில் இருப்பதற்காக கழிவறைக்கே செல்லாமல் இருப்பார்கள். இவ்வாறு தாமதப்படுத்தும் போது எமது இடுப்பு எலும்பு பலவீனமடைகிறது.
3. கர்ப்பமாக இருக்கும் சிலர் கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வதால் கருவிலிருக்கும் குழந்தைகள் வரை தொற்றுக்கள் சென்று விடுகின்றன.
4. பெண்களுக்கு தொற்றுக்கள் உடம்பிற்கு செல்வது அதிகம். இதனால் அவர்களின் சிறுநீரின் துர்நாற்றம் அதிகமாகும். இதனால் வயிற்று வலி கூட ஏற்படும்.
5. தற்போது இருக்கும் எண்பது சதவீதமான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கும். இவ்வாறு இருப்பவர் பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது இந்த வெள்ளைபடுதல் அதிகமாகும்.
6. இவ்வாறு தொற்றுக்கள் பரவிய ஒரு பெண், அவரது குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது இவரிடம் இருந்து அவரின் கணவருக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.