ரயில்களில் வெள்ளை நிற Bedsheets ஏன் Use பண்றாங்க?
இந்தியா போன்ற ரயில்களில் கொஞ்சம் வசதியுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்காக சொகுசு சேவைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் சொகுசு ரயில் சேவை.
அந்த ரயில் பொட்டிகளில் பயணிக்கும் சமயத்தில் பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகின்றன.
அப்படியொரு நிலையில் ஏன் பயணிகளுக்கு வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் வழங்குகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும். இதற்கான பதிலை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை நிற Bedsheets வழங்கப்படுவது ஏன்?
இந்திய ரயில்வே தினமும் பல ரயில்களில் பல பயணிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பெட்ஷீட்கள் மற்றும் தலையணை உறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தலையணை கவர் மற்றும் போர்வைகள் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட போர்வை 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி உருவாக்கும் பெரிய கொதிகலன்கள் பொருத்தப்பட்ட சிறப்பு இயந்திரங்கள் மூலம் இந்த பெட்ஷீட் மற்றும் தலையணை கவர்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
பெட்ஷீட்கள் 30 நிமிடங்களுக்கு இந்த நீராவிக்கு அவிக்கப்பட்டு அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. இத்தகைய கடுமையான சலவைக்கு மற்ற நிற பெட்ஷீட்களை விட வெள்ளை நிற பெட்ஷீட்கள் ஏற்றவையாக உள்ளன.
சுகாதாரம் மற்றும் தூய்மையை அடிப்படையாக வைத்து செய்யப்படும் இந்த செயன்முறைக்கு மற்றைய நிற பெட்ஷீட்கள் நிறம் மங்கி விடும். ஆனால் வெள்ளை நிறம் பிரகாசமானதாக இருக்கும்.
மற்றைய நிற பெட்ஷீட்களை தனித்தனியாக வைத்து ப்ளீச் செய்ய வேண்டும். அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் எந்தவிதமான சிக்கலும் பணியாளர்களுக்கு ஏற்படாது. இவ்வாறு வெள்ளை நிறம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவதால் பார்ப்பதற்கு ரயில் பெட்டிகள் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கும். இதனால் பயணிகள் அந்த ரயில் சேவையை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |