மூக்கு நோண்டுறவங்களுக்கு இந்த நோய் கண்டிப்பா வருமாம்.. ஜாக்கிரதை
மூக்கு நோண்டுவது என்பது சாதாரமாக மூக்கை சுத்தம் செய்யும் பழக்கமாகும்.
மாறாக இந்த பழக்கத்தை பொது இடங்களில் செய்யும் போது அது மற்றவர்களின் முகத்தை சுளிக்க வைக்கும்.
மூக்கை நோண்டுவது ஒருவருக்கு கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் ஆய்வுகளில் கூறுகின்றனர்.
அதாவது, “ மூக்கை நோண்டும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாத பழக்கமாக காணப்பட்டாலும், இது அல்சைமர், டிமென்ஷியா போன்ற மூளை நோய்களை ஏற்படுத்தும்..” எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், அல்சைமர், டிமென்ஷியா ஆகிய நோய்களின் தாக்கம் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
டிமென்ஷியா (Dementia)
டிமென்ஷியா (Dementia) என்பது அறிவாற்றலைக் குறைக்கும் நோயாக பார்க்கப்படுகின்றது. இந்நோய் தினசரி செயல்பாடுகளை செய்ய முடியாத அளவுக்கு கடினமாக்கும். இதனால் ஒருவரது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். மூக்கு நோண்டுவதால் ஏற்படும் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
மூக்கை நோண்டுவது எப்படி Dementia ஏற்படுகிறது?
விரல்களை மூக்கில் விட்டு நோண்டும் போது நமது விரல்களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் போன்றவை மூளைக்குள் எளிதாக நுழைந்து விடும். இது உட்ச் சென்று ஒரு வகையான வீக்கத்தை உண்டு பண்ணும். இது காலப்போக்கில் மூளை செல்களை சேதப்படுத்தும். இதனால் தான் டிமென்ஷியா நோய் தொற்று ஏற்படுகின்றது.
அல்சைமர், டிமென்ஷியா எதனால் ஏற்படுகிறது?
மனித மூளையில் சுமார் 100 பில்லியனுக்கும் அதிகமான செல்கள் உள்ளன. அவை சிந்தனை, கற்றல், நினைவில் வைப்பது மற்றும் திட்டமிடல் போன்ற செயல்பாடுகளுக்கு தேவையானது.
இந்த மூளை செல்களில் அமிலாய்டு புரோட்டீன் உருவாகும் போது அது பிளேக்குகளை ஏற்படுத்துகின்றது. இதனால் நரம்பு செல்களுக்கு இடையேயான தொடர்பை தடுக்கப்படுகிறது. ஒருகட்டத்தில் பின்னர் மூளை செல்கள் இறக்கத் தொடங்கி அல்சைமர் மற்றும் டிமென்ஷியா ஆகிய நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |