அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!
ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் ஒருவருடைய பிறப்பு ராசியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில், நிழல் கிரகமாக கருதப்படும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதுமாத்திரமன்றி கேது மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர்.

இந்த கேதுவுக்கு தனி ராசி இல்லையென்றாலும், நட்சத்திரம் உண்டு. அது தான் மகம் இந்த மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் உள்ளது. நிழல் கிரகமான கேது எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு இடம்பெயர்ச்சி அடைகின்றார்.
கேது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால், இந்த காலகட்டத்தில் கேது மிகவும் செல்வாக்கு மிக்கவராக திகழ்வார்.
அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நிதி மற்றும் தொழில் விடயத்தில் உச்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசியினர் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்கள் உண்டாகும். நீண்ட காலமாகவே தடைப்பட்டு வந்த விடயங்கள் எதிர்பாராத வகையில் வெற்றியளிக்கும்.
தொழில் ரீதியில் இந்த ராசியினருக்கு இந்த காலகட்டம் அமோக பலன்களை கொடுக்கப்போகின்றது. புதிய வாய்ப்புக்கள் தானாகவே அமையும்.
புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்

கேதுவின் மகம் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவுவை திறக்கப்போகின்ற என்று தான் சொல்ல வேண்டும்.
பணியிடத்தில் மதிப்பும், தரியாதையும் அதிகரிக்கும். தொழில் மாற்றத்துக்காக காத்திருப்போருக்கு மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். குறிப்பாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்

கேதுவின் மகம் நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத செல்வ செழிப்பை கொடுக்கப்போகின்றது.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பணியிடத்தில், பெயரும் புகழும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு இருக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
முன்னைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தால், வெற்றி உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |