Chanakya: திருமணமானவர்கள் இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. வாழும் போதே நரகம் தெரியும்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியர் கூற்றுப்படி திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர் அதனை அழிக்கும் வகையில் சில தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம் எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில், கணவன்-மனைவி அவர்களின் வாழ்க்கையில் செய்யக் கூடாத தவறுகள் தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கையில் செய்யக்கூடாத தவறுகள்
1. வாழ்க்கையில் மகிழ்ச்சி- துக்கம் என்பது மாறி மாறி வரும். அதனை மனதில் வைத்து சில விடயங்களை செய்யக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். கணவன்- மனைவி வாழ்க்கயைில், ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது. இந்த தவறை நாம் தொடர்ந்து செய்யும் போது உறவில் விரிசல் விழுகும்.
2. திருமண வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்தக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். சிறு சிறு சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை. அதுக்காக பேசுவதை நிறுத்துவது முற்றிலும் தவறு.
3. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனைத்து பணிகளிலும் ஒத்துழைக்க வேண்டும். கணவன் - மனைவி இருவரும் வேலைகளில் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும். திருமண வாழ்வில் கணவன் மனைவி பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம்.
4. கணவன் - மனைவி வாழ்க்கைக்கு பணம் அவசியம். ஆகையால் பணத்தை சம்பாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதே சமயம் அதனை கவனமாக செலவழிப்பது அவசியம். கணவன்-மனைவி இடையேயான உறவு சுமூகமாக இருக்கும். இதனை தவறும் பட்சத்தில் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும்.
5. உறவில் மரியாதை குறையும் போது அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இந்த தவறை தம்பதிகள் தொடர்ந்து செய்யும் போது பிரிவது உறுதி. திருமண உறவில் ஒரு ஆணோ பெண்ணோ அவமரியாதையாக நடந்து கொண்டால் அது நிரந்தர பிரிவை ஏற்படுத்தும் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |