நாய் நக்குவதால் செப்சிஸ் எனப்படும் ஆபத்தான நோய் - இது எப்படி தொற்றும்?
நாய் நக்குவது செப்சிஸ் போன்ற ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தும். பிரிட்டனில் 52 வயது பெண் ஒருவருக்கு செப்சிஸ் ஏற்பட்டது, இதனால் அவரது கைகால்களை துண்டிக்க வேண்டியிருந்தது. இந்த நோயை பற்றி முழுமையாக அறியலாம்.
நாய் நக்குவதால் செப்சிஸ் நோய்
இப்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு நாய் செல்லபிராணியாக வளர்க்கிறார்கள். வீட்டில் நாய் வளர்ப்பது பிரச்சை்சனை இல்லை ஆனால் நாயை படுக்கை அறை வரைக்கும் கொண்டு செல்வது அதில் இருக்கும் நோய் நமக்கும் பரவ வழிவகுக்கும்.
செல்லபிராணி எனும் போது அவற்றுடன் விளையாடுகிறார்கள், அவற்றை நேசிக்கிறார்கள் இதன்போது நாயும் மனிதனை நேசிக்கும். சில சமயங்களில் நாய்கள் அவர்களை நக்குவதன் மூலம் தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகின்றன.

ஆனால், ஒரு நாயின் பாச நக்குதல் உயிருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில், 52 வயதான பிரிட்டிஷ் பெண்மணி மன்ஜீத் சங்கா அவருக்கு ஏற்பட்ட காயத்தை தன்னுடைய வளர்ப்பு நாய் நக்கியதால் தன்னுடைய கால் கைகளை இழந்தார்.
அவரின் காயத்தை நாய் நக்கியதால் அவருக்கு செப்சிஸ் தொற்று ஏற்பட்டு அவரது கால்கள் மற்றும் முழங்கால்களுக்குக் கீழே உள்ள கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டன.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவத்துவதற்காக இந்த பதிவில் இந்த நோய் பற்றி அறியலாம்.

நாய் நக்கி இறந்த பெண்
ஜூலை 2025 இல் ஒரு நாள், மன்ஜீத் சங்கா வேலையிலிருந்து வீடு திரும்பியதும், அவருக்கு உடல்நிலை மோசமடைந்து மயக்கம் வந்தது.
அவரது கைகளும் கால்களும் குளிர்ந்து, உதடுகள் நீல நிறமாக மாறியது. அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவருக்கு செப்சிஸ் இருப்பதாகக் கண்டறிந்தனர்.

செப்சிஸ் என்பது ஒரு ஆபத்தான நிலை. பின்னர் இது அவருடைய செல்லபிராணி மூலம் தான் வந்திருக்கிறது என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
நாய் உமிழ்நீரில் கேப்னோசைட்டோபாகா கனிமோர்சஸ் பாக்டீரியா உள்ளது. இது மனிதர்களுக்கு கடுமையான தொற்றுகள் மற்றும் செப்சிஸை ஏற்படுத்தும். இந்த பெண் பாதிப்படைந்ததும் இதனால் தான்.

செப்சிஸ் என்றால் என்ன?
செப்சிஸ் என்பது உயிருக்கு ஆபத்தான தொற்று நிலை. இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகையாக செயல்பட்டு உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுத்துகிறது.
இதனால் ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கடுமையான நிலையில் இரத்த அழுத்தம் திடீரென குறைந்து, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல உறுப்பு செயலிழப்பு அபாயம் அதிகரிக்கிறது.

செப்சிஸின் அறிகுறிகள்
- அதிக காய்ச்சல் அல்லது மிகக் குறைந்த உடல் வெப்பநிலை
- வேகமான இதய துடிப்பு
- விரைவான அல்லது சுவாசிப்பதில் சிரமம்
- மிகக் குறைந்த சிறுநீர் கழித்தல்
- அதிக சோர்வு
- தோலில் சிவப்பு அல்லது கருமையான புள்ளிகள்
- குறைந்த இரத்த அழுத்தம்
- குளிர் அல்லது நடுக்கம்
- கடுமையான வலி அல்லது அசௌகரியம்.

என்ன முன்னெச்சரிக்கைகள் செய்யலாம்?
- தோலில் வெட்டுக்காயம் அல்லது கீறல் இருந்தால், செல்லப்பிராணியை அந்தப் பகுதியை நக்க விடாதீர்கள்.
- சிறிய காயங்களை உடனடியாக சுத்தம் செய்து மூடவும்.
- காய்ச்சல், குளிர் அல்லது திடீர் பலவீனம் ஆகியவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.
- செல்லப்பிராணிகளுடன் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |