உலகையே திரும்பி பார்க்க வைத்த இலங்கை முதியவர்! அப்படியென்ன சிறப்பு?
பொதுவாகவே நிறம் குறித்து பலருக்கு பல விருப்பங்களும் பல அபிப்பிராயங்களும் இருக்கும்.
அதிலும் ஒரு சிலர் எதை எடுத்தாலும் அந்த நிறம் தான் எனக்குப் பிடிக்கும், அதே நிறத்தில் தான் எனக்கு ஆடை வேண்டும் என தலையில் இருந்து கால் வரைக்கும் பிடித்தமான நிறத்தில் ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்துக் கொள்வார்கள்.
அதே போல ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி தனக்கு பிடித்த நிறத்தில் அனைத்தையும் வெள்ளை நிறத்தில் மாற்றியிருக்கிறார் 72 வயதான முதியவர்.
White and Whiteல் வாழும் முதியவர்
வெள்ளை நிறத்தின் மீது அதீதி ப்ரியம் கொண்ட 72 வயதான அபுசாலி இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இவரிடம் இருக்கும் பொருட்கள் ஆடைகள் எல்லாம் வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறதாம்.
மேலும் இவருக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருட்கள் மீது அதிக பிரியமாம். எங்கு போனாலும் வெள்ளைநிறத்தில் இருக்கும் பொருட்களை கண்டாலே வாங்கிக் கொள்வாராம்.
மேலும், இவர் அணியும் ஆடைகளிலிருந்து படுக்கையறை வரைக்கும் அனைத்துப் பொருட்களுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |