விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன தெரியுமா?
விமானங்கள் அநேகமாக வெள்ளை நிறத்தில் காணப்படுவதனை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். பெரும்பாலான விமானங்களின் அதிகளவான பரப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும்.
அந்தந்த விமான சேவை நிறுவனங்களுக்கு தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பெயர்கள் வித்தியாசமாக காணப்படுமே தவிர அடிப்படை நிறம் வெள்ளை நிறமாகவே காணப்படுகின்றது.
ஏன் இவ்வாறு வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த சுவாரஸ்மான தகவல்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
வெள்ளை நிற பெயின்ட்
வெள்ளை பெயின்ட் பூசுவதனால் பணத்தை சேமிக்க முடியும் ஏனைய நிறங்களை பூசுவதனை விடவும் வெள்ளை பெயின்ட் பூசுவது பணத்தை மீதப்படுத்தக் கூடியதாகும்.
விமானங்களுக்கு பெயின்ட் பூசுவதனால் விமானத்தின் எடையை 600 முதல் 1200 பவுண்ட்கள் வரையில் அதாவது 272 முதல் 544 கிலோ கிராம் வரையில் அதிகரிக்கின்றது.
Telegraph
விமானத்தின் கூடுதல் எடையானது அதிகளவு எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். விமானங்களின் தேவையற்ற எடையை குறைப்பதனால் எரிபொருள் செலவினை சேமிக்க முடியும்.
செலவு மிச்சம்
பெயின்ட் பூசுவதற்கு பெருந்தொகை செலவாகின்றது என்பதுடன், நிறம் மங்கும் போது மீளவும் பெயின்ட் பூச வேண்டியேற்படுகின்றது.
எனினும் வெள்ளை நிறமானது ஏனைய நிறங்களுடன் ஒப்பீடு செய்யும் போது அவ்வளவு எளிதில் மங்குவதில்லை. இதனால் அடிக்கடி விமானங்களுக்கு மீளவும் பெயின்ட் பூச வேண்டியதில்லை.
747 போயிங் ரக விமானமொன்றிற்கு பெயின்ட் பூசுவதற்கு சுமார் 545.43 லீற்றர் பெயின்ட்டும், 767 போயிங் ரக விமானமொன்றிற்கு பெயின்ட் பூசுவதற்கு 409 லீற்றர் பெயின்ட் தேவைப்படுகின்றது.
வர்த்தக விமானமொன்றை பெயின்ட் பூசுவதற்கு 50000 முதல் 200000 டொலர்கள் வரையில் தேவைப்படுகின்றது.
எப்போதும் குளிர்மை
வெள்ளை நிறத்தில் விமானங்கள் இருந்தால் அதனை விற்பனை செய்வதற்கும் சுலபம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை நிறத்தில் விமானங்கள் இருந்தால் அவற்றை திருத்தங்களை செய்வது இலகுவாகும்.
வெள்ளை நிறம் விமானத்தை குளிர்மையாக வைத்துக் கொள்ளும் கோடை காலத்தில் நாம் குளிர் வர்ணங்களை உடைய ஆடைகளை அணிவது போன்றே விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதனால் அவை குளிர்மையாக இருக்கின்றன.
குறிப்பாக வெள்ளை நிற விமானங்கள் குறைந்த அளவில் சூரியனிடமிருந்து வெப்பத்தை உறிஞ்சுகின்றது.
வெள்ளை நிறத்தில் விமானங்கள் இருப்பதனால் புற ஊதா கதிர்களிடமிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் வரையறுக்கப்படுகின்றன.
இலகுவான பராமரிப்பு
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வெள்ளை நிறத்தில் விமானத்திற்கு பெயின்ட் பூசுவதனால் பராமரிப்பிற்கு இலகுவாகின்றது.
விமானங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றை இலகுவில் கண்டறிய முடியும். எண்ணெய் கசிவுகள், வெடிப்புகள், கீறல்கள் உள்ளிட்ட குறைபாடுகளை விரைவில் கண்டறிந்து கொள்ள முடியும்.
விமானத்திற்கு வெள்ளை நிறத்தில் பெயின்ட் பூசுவதனால் பறவைகள் மோதுவதனை தவிர்க்க முடியும்.
சில விதி விலக்குகள் நியூசிலாந்தில் சுற்றுலா நோக்கத்திற்காக அந்நாட்டின் சில விமானங்கள் கறுப்பு நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டது.
இவ்வாறு சில விமான சேவை நிறுவனங்கள் தங்களுக்கு உரித்தான சில நிறங்களினால் விமானத்தை பெயின்ட் செய்கின்றன.
ஏன் விமானங்கள் நேர்வழிப் பாதையில் பயணிப்பதில்லை?